சர்வாதிகாரர்களுக்கு மரணம் நிச்சயம்..கேன்ஸ் விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு

பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சார்லி சாப்லினின் திரைப்படத்தை மேற்கோள் காட்டி பேசிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, சர்வாதிகாரகளுக்கு மரணம் நிச்சயம் எனக் குறிப்பிட்டார்.

Written by - Chithira Rekha | Last Updated : May 18, 2022, 08:14 PM IST
  • சர்வாதிகாரகளுக்கு மரணம் நிச்சயம்
  • கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு
  • ஏற்கனவே கிராமி விழாவில் பேச்சு
சர்வாதிகாரர்களுக்கு மரணம் நிச்சயம்..கேன்ஸ் விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு title=

75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நேற்று தொடங்கியது. கேன்ஸ் திரைப்பட விழா 28-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கேன்ஸ் திரைப்பட விழாவில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 84 நாட்களாக சண்டை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு சினிமா உலகத்தினரின் ஆதரவு வேண்டுமென விளாடிமிர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டார்.  யதார்த்த வாழ்விற்கும், சினிமாவிற்கும் இடையே உள்ள ஒற்றுமை குறித்துப் பேசிய அவர், கடந்த 1940-ம் ஆண்டு வெளியான சார்லி சாப்லினின் "தி கிரேட் டிக்டேட்டர்" படத்தைக் குறிப்பிட்டு பேசினார். 

மேலும் படிக்க | புற்று நோயால் ரஷ்ய அதிபரின் உடல் நிலை மோசமாகிறதா... வெளியான அதிர்ச்சித் தகவல்

"மனிதர்களின் வெறுப்பு மறைந்துவிடும், சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள். மேலும் அவர்கள் மக்களிடமிருந்து பெற்ற அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனித இனம் அழியும் வரை சுதந்திரம் அழியாது எனவும் ஜெலன்ஸ்கி கூறினார். தற்போது நடப்பதைக் கண்டு சினிமா உலகம் அமைதியாக இருக்கக் கூடாது எனவும், இதனை நிரூபிக்க புதிய சார்லி சாப்லின்கள் தேவை எனவும் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.

உக்ரைன் போரைப் பற்றி கவனத்தை ஈர்ப்பதற்காக விலாடிமிர் ஜெலென்ஸ்கி சர்வதேச நிகழ்வில் தோன்றுவது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம் நடைபெற்ற 64-வது கிராமி விருது வழங்கும் விழாவிலும் காணொலி வாயிலாகப் பேசி தங்களது நாட்டிற்கு ஆதரவு கோரினார். இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் போர் தொடர்பான பல்வேறு ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன. மேலும் மரியுபோல் நகரில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட லிதுவேனிய திரைப்பட இயக்குநர் மந்தாஸ் க்வேடராவியஸ் கடைசியாகப் படம் பிடித்த காட்சிகளும் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட உள்ளன.

மேலும் படிக்க | ரஷ்யா ஏவுகணை பயங்கரவாத உத்தியை பயன்படுத்துகிறது: உக்ரைன்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News