US Visa: ஆன்லைனில் அமெரிக்க விசா ரெனியூவல்! அருமையான வாய்ப்பை தவறவிடவேண்டாம்!

H-1B Visa Online Updation: ஆன்லைனிலும் அமெரிக்க விசாவை புதுப்பிக்கலாம் தெரியுமா? US H-1B விசா புதுப்பித்தல் இயக்கம் ஆன்லைனில் தொடங்கியது... எப்படி விண்ணப்பிப்பது? விதிமுறைகள் என்ன?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 31, 2024, 08:04 AM IST
  • ஆன்லைனில் US H-1B புதுப்பிக்க தேவையான ஆவணங்கள்
  • விசா புதுப்பிக்க வேறு நாட்டிற்கு செல்ல வேண்டாம்
  • ஆன்லைனில் விசா புதுப்பிப்பது எப்படி?
US Visa: ஆன்லைனில் அமெரிக்க விசா ரெனியூவல்! அருமையான வாய்ப்பை தவறவிடவேண்டாம்! title=

Alert H-1B non-immigrant visa holders: ஆன்லைனில் அமெரிக்க விசாவை புதுப்பிக்கலாம் என்ற புதிய நடைமுறையை அமெரிக்க அரசு முன்னெடுத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 29ம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு புதுப்பிக்கும் நடைமுறையில் US H-1B விசாவை இந்தியர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் எச்.ஒன்பி விசாவை எப்படி புதுப்பிக்கலாம் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.  

ஆன்லைனில் விசா புதுப்பிக்கலாம் என்ற வசதி இந்தியா அல்லது கனடாவில் இருந்து விசா பெற்ற US H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கிறது. இந்த விசாக்களை புதுப்பிப்பதற்காக அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியே செல்ல வேண்டியதில்லை. 

இந்த பைலட் திட்டம் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் அமெரிக்க விசா கொள்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றமாகும். பொதுவாக எச்-1பி விசாவைப் பெறுவதற்கு மட்டுமல்ல, அது தொடர்பான சம்பிரதாயங்களைச் செய்யவும், நடைமுறைகளும் அதிகம், நீண்ட நேரம் காத்திருக்கவும் வேண்டியிருக்கும். 

எனவே தற்போது அமெரிக்க அரசு முன்னெடுத்திருக்கும் ஆன்லைன் விசா புதுப்பித்தல் திட்டம், US H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இரு தினங்களுக்கு முன்னதாக, அதாவது ஜனவரி 29, 2024 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் ஏப்ரல் 1, 2024 வரை தொடரும்.

இது தொடர்பாக அமெரிக்க அரசின் குடியேற்றத் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | அடேங்கப்பா... உலகின் பணக்கார குடும்பம்... ரூ.4000 கோடி மதிப்பிலான வீடு... 700 சொகுசு கார்கள்

ஆன்லைன் புதுப்பித்தல் செயல்முறை மூலம் அமெரிக்க H-1B விசாவை எவ்வாறு புதுப்பிப்பது?

ஆன்லைன் விசா புதுப்பிக்க தகுதிகள்

சில தேவைகளைப் பூர்த்தி செய்யும் தகுதிவாய்ந்த H-1B புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா வைத்திருப்பவர்கள் தங்கள் விசாவைப் ஆன்லைனில் புதுப்பிக்கலாம். இந்த வகையைச் சேர்ந்தவர்கள், இந்த பைலட் திட்டத்தின் மூலம் விசாவை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.

US H-1B விசா ஆன்லைன் புதுப்பித்தலுக்கான தகுதி

கனடாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம்  மூலம் விசாக்கள் வாங்கிய H-1B விசாதாரர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

கனடாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் ஜனவரி 1, 2020 முதல் ஏப்ரல் 1, 2023 வரை  H-1B வாங்கியவர்கள் இந்த ஆன்லைன் விசா புதுப்பிப்பு மூலம் விசாவை ரெனியூவல் செய்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் பிப்ரவரி 1, 2021 முதல் செப்டம்பர் 30, 2021 வரை H-1B வாங்கியவர்கள் இந்த ஆன்லைன் விசா புதுப்பிப்பு மூலம் விசாவை ரெனியூவல் செய்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | உலக பணக்காரர்... எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளிய பெர்னார்ட்.... 11வது இடத்தில் அம்பானி!!

H-1B விசாவை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தின் மூலம், விசா புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

படி 1: விசா வைத்திருப்பவர் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தைப் பார்வையிடும் போது, அவர்களது மிகச் சமீபத்திய H-1B விசா வழங்கப்பட்ட நாட்டை (இந்தியா அல்லது கனடா) தேர்ந்தெடுக்க வேண்டும். நேவிகேட்டர் கருவி, விசா வைத்திருப்பவரை ஒரு வலைப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லும், அங்கு பைலட் ஆன்லைன் விசா புதுப்பித்தல் திட்டத்திற்கான தகுதியை சரிபார்க்கலாம்.

படி 2: விசா வைத்திருப்பவர் திட்டத்திற்குத் தகுதி பெற்றிருந்தால், அவர்கள் இணையப் பக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றும்படி கேட்கப்படுவார்கள் மேலும் DS-160 படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவம் ஆன்லைன் அல்லாத குடியேற்ற விசா விண்ணப்பம் என்று அழைக்கப்படுகிறது.

படி 3: விண்ணப்பதாரர் மாற்ற முடியாத, திரும்பப் பெற முடியாத மெஷின்-ரீடபிள் விசா (MRV) விண்ணப்பச் செயலாக்கக் கட்டணத்தைச் செலுத்தும்படி கேட்கப்படுவார். இதற்கான கட்டணம் $205 ஆகும்.

படி 4: விசா வைத்திருப்பவர், விசா புதுப்பித்தல் செயல்முறைக்கான பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களை பதிவேற்ற போர்ட்டலில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

அதிகபட்சமாக 20,000 விசாக்கள் இந்த ஆன்லைன் திட்டத்தின் மூலம் புதுப்பிக்கப்படும்.  

பிப்ரவரி மாதத்தில் பின்வரும் தேதிகளில் விசாக்களை புதுப்பிக்கலாம்.

பிப்ரவரி 5, 2024
பிப்ரவரி 12, 2024
பிப்ரவரி 19, 2024
பிப்ரவரி 26, 2024

இந்த தேதிகளில் விண்ணப்பிப்பவர்களில், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்பதன் அடிப்படையிலேயே விசாக்கள் புதுப்பிக்கப்படும். H-1B விசா வைத்திருப்பவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள காத்திருக்கின்றனர். ஏனெனில் ஏப்ரல் 1, 2024 வரை மட்டுமே நீடிக்கும் இந்த விசா புதுப்பித்தல் வாய்ப்பு, 20,000 விசாக்கள் புதுப்பிக்கப்பட்டுவிட்டால், குறிப்பிடப்பட்டுள்ள நாட்களுக்கு முன்னரே, ஆன்லைன் புதுப்பிப்பு நிறுத்தப்படும்.  

மேலும் படிக்க | குடும்பத்திற்கே நல்ல நேரம்... கிரிக்கெட்டில் கலக்கும் 'கான்' சகோதரர்கள்...! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News