இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்: பங்குச் சந்தையில் தாக்கம்; கச்சா எண்ணெய், தங்கத்தின் விலை உயரலாம்

Israel Palestine War: மோதல் காரணமாக உலகளவில் பங்குச் சந்தைகளில்  பெரும் மாற்றம்.  வீழ்ச்சி அடைந்து இருந்த கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 10, 2023, 12:59 PM IST
இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்: பங்குச் சந்தையில் தாக்கம்; கச்சா எண்ணெய், தங்கத்தின் விலை உயரலாம் title=

Israel Palestine Latest News: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் (Israel-Palestine Conflict) தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு தரப்பிலிருந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுவரை 900 இஸ்ரேலியர்கள் மற்றும் 704 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அதேபோல இஸ்ரேலியர்கள் 2,600-க்கும் அதிகமாகவும், பாலஸ்தீனர்கள் தரப்பில் 4000 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த மோதல் இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருதரப்பில் இருந்தும் தாக்கி கொள்கிறார்கள். இது இரு நாடுகளுக்கு இடையிலான மோதலாக இல்லாமல் மெல்ல மெல்ல சர்வதேச பிரச்சனையாக மாறி வருகிறது. இந்த மோதல் மற்றொரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதுக்குறித்து பார்ப்போம்.

இஸ்ரேல் பாலஸ்தீன் இரு நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக தங்கம் விலையில் பெரிய ஏற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் என்பது வெறும் ஆபரணமாக மட்டுமல்ல, முதலீடாகவும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏதேனும் பேரழிவு அல்லது நெருக்கடி ஏற்பட்டால், முதலீட்டிற்கான பாதுகாப்பான இடமாக தங்கம் பார்க்கப்படுகிறது, தற்போதைய நெருக்கடிக்குப் பிறகும், தங்கத்தின் முதலீடு வளர்ச்சிக்கான பாதையை நோக்கி இருக்கப் போகிறது.

அதேநேரத்தில் சமீபகாலமாக வீழ்ச்சி அடைந்து இருந்த கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. உலகளவில் பங்குச் சந்தைகளில்  பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல பங்குகள் வீழ்ச்சி அடைந்து வருவதால், தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பான இடம் கருதி வருகின்றனர்.

மேலும் படிக்க - Israel Hamas Conflict: விடிய விடிய தாக்குதல்.. பெண்கள், குழந்தை என இதுவரை 1600 பேர் பலி

இஸ்ரேல் மீது 5000 ராக்கெட்டுகளை வீசி தாக்கிய ஹமாஸ் குழு

கடந்த சனிக்கிழமை (2023 அக்டோபர் 07) அதிகாலை பாலஸ்தீனியக் குழுவான ஹமாஸ் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது 5000 ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை இஸ்ரேல் மட்டுமில்லை, உலக நாடுகளும் வியப்பில் ஆழ்த்தியது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. உளவு பார்ப்பதில் எங்களை யாரும் அசைக்க முடியாது என திடமான நம்பிக்கையில் இருந்த இஸ்ரேல் மீதான ஹமாஸ் குழிவின் தாக்குததால் உலக அரங்கில் இஸ்ரேலின் முகத்திரை கிழிக்கப்பட்டு உள்ளது. 

இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்கா

தங்களுக்கு ஏற்பட்ட தலைகுனிவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது இஸ்ரேல். இருவருக்கும் இடையே நடந்து வரும் இந்த மோதலில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 4,000 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மறுபுறம், ஹமாஸின் தாக்குதலுக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. சில நாடுகள் பாலஸ்தீன் பக்கம் நின்றுள்ளது.

மேலும் படிக்க - Afghanistan Earthquake: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ எட்டியது.. சுமார் 2,000 வீடுகள் சேதம்

யுத்தம் காரணமாக தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு

மத்திய கிழக்கி பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் நிகழ்வுகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இஸ்ரேல் பாலஸ்தீன் வன்முறை காரணமாக தற்போது பாதுகாப்பான புகலிட முதலீடுகளை நோக்கி நகர்த்துகிறது.

போர் ஏற்படும் போதெல்லாம் வலுவடையும் டாலர்

ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகத்தின் அறிக்கையின்படி, அதிகரித்து வரும் புவிசார் அரசியல் அபாயங்கள் தங்கத்தை அதிக அளவில் வாங்குவதைக் காணலாம். தங்கத்தில் அதிக முதலீடு செய்யப்படுகிறது. மறுபுறம் சிலர் டாலர் மீதான் முதலீடும் பலன் தரும் என்றும் கூறியுள்ளார். சர்வதேச அளவில் கொந்தளிப்பு ஏற்படும் போதெல்லாம் டாலரும் வலுவடைகிறது என்பதும் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது.

இரு நாடுகளின் போர் பல நாடுகளின் போராக மாறுமா? 

இஸ்ரேல் பாலஸ்தீன் மோதல் எவ்வளவு காலம் நீடிக்கும் மற்றும் பிற நாடுகளும் இதில் ஈடுபடுமா என்பதைப் பொறுத்து அடுத்து வரும் நாட்களில் தங்கத்தின் மீதான் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கலாம். ஏற்கனவே ஹமாஸ் தாக்குதலை ஈரானும் ஈரானின் லெபனான் கூட்டாளியான ஹிஸ்புல்லாவும் வெளிப்படையாக ஆதரித்து உள்ளனர். 

மேலும் படிக்க - இஸ்ரேலில் ஹமாஸ் படை தாக்குதல்: தொடர்ந்து அதிகரிக்கும் உயிர் பலி!

கச்சா எண்ணெய் விலை உயருமா? 

இஸ்ரேல் பாலஸ்தீன் மோதல் குறித்து ப்ளூம்பெர்க் அறிக்கையில், ராபிடன் எனர்ஜி குழுமத்தின் தலைவரும், வெள்ளை மாளிகையின் முன்னாள் அதிகாரியுமான பாப் மெக்னலி கூறுகையில், "இந்த மோதல் ஈரான் வரை பரவினால், கச்சா எண்ணெய் விலை பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இது சாத்தியமில்லை என்றாலும், ஈரானின் உள்கட்டமைப்பை தாக்கி இஸ்ரேல் பதிலடி கொடுக்க நினைத்தால், கச்சா எண்ணெய் விலை உடனடியாக உயரும்" என்றார்.

தங்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியர்கள்

இந்தியாவில் தங்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மக்கள் அதை நகைகளாக விரும்பினாலும், மறுபுறம் முதலீட்டிற்கான சிறந்த தேர்வாகவும் கருதுகின்றனர். உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் நிலநடுக்கம் அல்லது வேறு ஏதேனும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், தங்கத்தின் தேவை அதிகரிப்பது பொதுவாகக் காணப்படுகிறது.

மேலும் படிக்க - 5000 ராக்கெட்டுகள் தாக்குதல்.. 200 பேர் பலி; போரை அறிவித்த இஸ்ரேல் - அடுத்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News