45 நாள்களில் பதவி காலி... லிஸ் ட்ரஸ் ராஜினாமா - இங்கிலாந்தின் அடுத்த பிரமதர் யார்?

இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்ற 45 நாள்களில், தன்னுடைய பதவியை லிஸ் ட்ரஸ் இன்று ராஜினாமா செய்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 20, 2022, 07:33 PM IST
  • மறைந்த மகாராணி 3ஆம் எலிசெபத்தால் கடைசியாக நியமிக்கப்பட்ட பிரதமர் லிஸ் ட்ரஸ்
  • பதவி விலக வாய்ப்பில்லை என கூறிய 24 மணிநேரத்தில் லிஸ் ட்ரஸ் ராஜினாமா
  • அடுத்த பிரதமாரக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக்கிற்கு வாய்ப்புள்ளது.
45 நாள்களில் பதவி காலி... லிஸ் ட்ரஸ் ராஜினாமா - இங்கிலாந்தின் அடுத்த பிரமதர் யார்? title=

இங்கிலாந்தில் பிரதமராக பொறுப்பேற்ற, லிஸ் ட்ரஸ் கொண்டுவந்த பொருளாதார திட்டங்கள், பொருளாதாரத்தை கடும் வீழ்ச்சியடைய செய்தது. சந்தைகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த திட்டங்கள், அவருடைய கன்சர்வேடிவ் கட்சியிலும் பிளவை உண்டாக்கியது. 

தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் போர்க்கொடி உயர்த்தினர்.  

இந்நிலையில், தான் பதவியேற்ற 45ஆவது நாளில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக லிஸ் ட்ரஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"கன்சர்வேடிவ் கட்சியால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கொடுத்த வாக்குறுதியை என்னால் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன். எனவே, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, அரசரிடம் தெரிவித்துள்ளேன். வேறொரு நபரை தேர்ந்தெடுக்கும் வரை பிரதமர் பதவியில் தொடர்வேன்" என்றார். 

மேலும் படிக்க | மாடுகள் விடும் ஏப்பத்திற்கு வரி.. போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்!

மேலும், அடுத்த வாரத்திற்குள் எம்பிக்கள் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் கூறினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் பிரமதர் போரிஸ் ஜான்சன், பென்னி மோர்டான்ட் ஆகியோர் அடுத்த பிரதமராக தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

முன்னதாக,"தான் எதற்கும் போராடுபவர், எதையும் விட்டு ஓட மாட்டேன். முன் நின்று போராடதான் நான் தேர்வு செய்யப்பட்டேன். கடுமையான முடிவுகளை எடுக்கவும் நான் தயாராகியுள்ளேன்" என நேற்றுதான், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பில்லை என்று லிஸ் ட்ரஸ் பேசியிருந்தார். இருப்பினும், அடுத்த 24 மணிநேரத்திற்குள் தனது முடிவை மாற்றி அவர் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

லிஸ் ட்ரஸ் அரசின் நிதி அமைச்சர் குவாசி குவார்டெங், அறிவித்த மினி-பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த குழப்பம் வாய்ந்த பிரீமியர்ஷிப் திட்டம் பொருளாராத்தில் பெரும் சேதாரத்தை விளைவித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்திட்டம் குறித்த அறிவிப்பால் மட்டும், அமெரிக்க டாலருக்கு நிகரான அந்நாட்டின் பவுண்டு கடுமையான சரிவை சந்தித்தாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, பல்வேறு சிக்கலைகள் ஏற்பட்டதை அடுத்து குவாசி குவார்டெங்கை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, வேறொருவரை லிஸ் ட்ரஸ் நியமித்தார். இதையடுத்து, தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டதால் லிஸ் ட்ரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மறைந்த மகாராணி மூன்றாம் எலிசபெத்தால் கடைசியாக நியமிக்கப்பட்ட பிரதமர், லிஸ் ட்ரஸ். இவர் வெறும் 45 நாள்களில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News