இலங்கை நெருக்கடி: போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்த அரசு

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, நிலைமை மோசமாகி வருகிறது. போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 10, 2022, 09:12 PM IST
இலங்கை நெருக்கடி: போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்த அரசு title=

முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி காரணமாக , மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து நடந்த மோசமான வன்முறையில்,  ராஜபக்சேவின் மூதாதையர் வீடு உள்ள ஆளும் கட்சியை சேர்ந்த பல வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, நிலைமை மோசமாகி வருகிறது. இலங்கையில் ஏற்பட்டு வரும் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், திங்கள்கிழமை, அம்பாந்தோட்டாவில் உள்ள ராஜபக்சேவின் மூதாதையர் வீடு, 14 முன்னாள் அமைச்சர்கள், 18 எம்.பி.க்கள் மற்றும் ராஜபக்சே குடும்பத்திற்கு விசுவாசமான தலைவர்களின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து அரசு போராட்டக்காரர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை பிறப்பித்துள்ளது.

கலவரக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு

இலங்கையில் இப்போது போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துகளை யாராவது கொள்ளையடித்தால் அல்லது வன்முறைப் போராட்டங்களை நடத்தினால், அவரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளது.

மேலும் படிக்க |  பற்றி எரிகிறது இலங்கை; போராட்டக்காரர்களை தாக்கிய அரசு ஆதரவாளர்கள் 

ராஜபக்சேவின் வீடு எரிக்கப்பட்டது

வன்முறையில் ஈடுபட வேண்டாம் என அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து இராணுவத்திற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் இடம்பெற்ற வன்முறை மோதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். திங்கட்கிழமை, மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்தார், அதன் பிறகு அவரது வீடு எரிக்கப்பட்டது.

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு

அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான வன்முறையால் தலைநகர் கொழும்பில் இராணுவம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆளும் கட்சி தலைவர்களும் அவர்களது விசுவாசிகளும் நாட்டை விட்டு வெளியேற முடியாத வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் புறக்காவல் நிலையங்களை அமைத்துள்ளனர்.

அதிபரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை 

இதற்கிடையில், வன்முறைக்குப் பிறகு, மகிந்த ராஜபக்ச, தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன், தனது அதிகாரபூர்வ இல்லமான டெம்பிள் ட்ரீஸை விட்டு வெளியேறி, இலங்கையின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுக நகரமான திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சமடைந்தார்.

மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள் 

மக்கள் போராட்டம்

இலங்கையில் கடந்த 3 மாதங்களாக அரசை அகற்றக்கோரி போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜபக்சே அரசு ஊழல்வாதிகள் என்றும், இலங்கையில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பட்டினிச் சாவுக்கு ராஜபக்சே சகோதரர்களின் தவறான கொள்கைகளே காரணம் என்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது இலங்கையில் ஊரடங்கு உத்தரவு உள்ளது. ஆனால் போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். பிரதமர் ராஜினாமா செய்த நிலையில், மகிந்தா ராஜபக்சேவை அடுத்து, அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News