Russia Ukraine Crisis: போர்க்களத்தில் மலரும் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம்

Ukraine and Russia Grain Deal: உக்ரைன் மீதான போருக்கு மத்தியில், தடை செய்யப்பட்ட தானிய ஏற்றுமதியை புதுப்பிக்கும் நோக்கில் உக்ரைனும் ரஷ்யாவும் இன்று தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 22, 2022, 06:39 AM IST
  • தொடரும் போருக்கு மத்தியில் ஏற்படும் சிறிய ஆசுவாசம்
  • தானிய பற்றாக்குறையால் உலகத்தில் கோடிக்கணக்கானவர்கள் அவதி
  • உக்ரைனும் ரஷ்யாவும் தானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன
Russia Ukraine Crisis: போர்க்களத்தில் மலரும் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் title=

சர்வதேச அளவில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை மற்றும் அரிசியின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில், பல மாதங்களாக தொடரும் ரஷ்யா உக்ரைன் இடையிலான போரினால், உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் தானியங்களின் விலை உயர்வுக்கும், தேவையை பூர்த்தி செய்வதில் சுணக்கமும் ஏற்பட்டுள்ளது. உக்ரேனின் துறைமுகங்களில் 25 மில்லியன் டன் கோதுமை மற்றும் பிற தானியங்கள் தேங்கிக் கிடப்பதால் யாருக்கும் பயனின்றி தானியங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் போருக்கு மத்தியில், தடை செய்யப்பட்ட கருங்கடல் பகுதியில் தானிய ஏற்றுமதியை புதுப்பிக்கும் நோக்கில் உக்ரைனும் ரஷ்யாவும் இன்று (ஜூலை 22) ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலகளாவிய உணவு நெருக்கடிக்கு வழிவகுத்திருப்பதால், அதை சீர் செய்ய இரு நாடுகளும் போருக்கு மத்தியில் ஒரு சமரச தீர்வுக்கு வந்துள்ளன. 

மேலும் படிக்க | சீன அடிப்படையிலான இஸ்லாமியர்களாக இருப்பது எப்படி: முஸ்லிம்களின் கேள்வி

உரம், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் போரால் உயர்ந்தன. இந்தப் போரால், உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களை பட்டினியில் வாடச்செய்யும் அபாயங்கள் அதிகரித்துவரும் நிலையில், அவசர நடவடிக்கை தேவை என சர்வதேச நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர், இந்த நிலையில், உணவு பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக, போரில் ஈடுபட்டிருக்கும் இரு நாடுகளும் ஒரு உடன்படிக்கையை எட்டுவது ஒரு ஆறுதல் தரும் செய்தியாக இருக்கிறது.

தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் உக்ரைன், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் கையெழுத்திடும் என்ரும், அந்த ஒப்பந்தத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸும் கையெழுத்திடுவார் என்று துருக்கி அதிபர்தையிப் எர்டோகனின் அலுவலகம் நேற்று (2022, ஜூலை 21, வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.

துருக்கி அதிபரின் எர்டோகனின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கலின் இந்த ஒப்பந்தம் தொடர்பாக டிவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளார். 

"உலக உணவுப் பாதுகாப்பிற்கு முக்கியமான தானிய ஏற்றுமதி ஒப்பந்தமானது, இஸ்தான்புல்லில் கையெழுத்தாகும். அதிபர் (ரெசெப் தையிப்) எர்டோகன் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் எம். குட்டரெஸ் ஆகியோரும், உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள்" என்று டிவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனை டெஹ்ரானில் சந்தித்தார்.

மேலும் படிக்க | தங்க வாட்சா இருந்தாலும் இந்த விலை டூ மச் மிஸ்டர் ஹிட்லர்

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை மற்றும் அரிசியின் முக்கிய ஏற்றுமதியாளர்களாக உள்ளன, ஏனெனில் உக்ரேனிய துறைமுகங்களில் 25 மில்லியன் டன் கோதுமை மற்றும் பிற தானியங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் தொடர்பாக, ரஷ்யா இதுவரை எந்த செய்தியையும் வெளியிடவில்லை.

ஆனால், தானிய ஏற்றுமதி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்த எர்டோகனுக்கு புடின் நன்றி தெரிவித்திர்நுதார். பேச்சுவார்த்தையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் ரஷ்ய அதிபர் சூசகமாக தகவல் தெரிவித்திருந்தார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று இரவு வெளியிட்ட ஒரு வீடியோவில், நாட்டின் கருங்கடல் துறைமுகங்களில் சரக்குப் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படலாம் என்று தெரிவித்திருந்தார்."நாளை துருக்கியிடமிருந்து நமது நாட்டிற்கான செய்திகளையும் எதிர்பார்க்கிறோம் - அந்த செய்தி நமது துறைமுகங்கள் இயங்குவது தொடர்பானதாக இருக்கும்" என்று ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | ரஷ்யாவுக்கு ட்ரோன்களை வழங்க ஈரான் திட்டமிட்டுள்ளதா: அமெரிக்கா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News