வீரர்களுக்கு 'வயக்ரா'... பாலியல் வன்முறையை தூண்டிய ரஷ்யா - அதிர்ச்சி ரிபோர்ட்

போர் வீரர்களுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டும் வயக்ரா போன்ற மருந்துகளை கொடுத்து, உக்ரைனியர்கள் மீது பாலியல் வன்முறைகளை ரஷ்யா மேற்கொண்டதாக ஐநா குற்றஞ்சாட்டியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 16, 2022, 05:21 PM IST
  • ரஷ்யா - உக்ரனை போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.
  • ரஷ்யா போர் குற்றங்களை புரிந்துவருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.
வீரர்களுக்கு 'வயக்ரா'... பாலியல் வன்முறையை தூண்டிய ரஷ்யா - அதிர்ச்சி ரிபோர்ட் title=

ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில், ரஷ்யா, உக்ரைன் என இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான மக்களும், போர் வீரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

வீடுகளை இழந்து அண்டை நாடுகளுக்கு உக்ரைனிய மக்கள் பலரும் அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும், ரஷ்யா இதில் போர் நெறிமுறைகளை மீறி செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன. பெண்களின் கை, கால்கள் கட்டப்பட்டு அவர்கள் வீதிகளில் சடலங்களாக கிடக்கும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

அந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநியான பிரமிளா பட்டன் பெரும் குற்றச்சாட்டு ஒன்றை ரஷ்யா மீது வைத்துள்ளார். அதாவது, போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைனில் பெண்கள் உள்பட பலரும் பாலியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றிக்கு அவர் அளித்த பேட்டியில், உக்ரைனியர்களை ரஷ்ய ராணுவத்தினர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவதாகவும், அதற்காக ரஷ்யா தனது வீரர்களுக்கு பாலியல் உணர்வை அதிகரிக்க பயன்படும் வயக்ரா வகை மருந்துகளை கொடுப்பதாகவும் அதிரடியாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க | அழகியுடன் உல்லாசம்... தனது 'ஆபாச' வீடியோவை தானே வெளியிட்ட அரசியல்வாதி!

பெண்களை நீண்ட நாள்களுக்கு பிடித்துவைத்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், சிறுவர்கள், ஆண்களைும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட உக்ரைனியர்களின் வாக்குமூலங்கள் மூலம் தெரிந்துகொண்டதாக பிரமிளா தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள், ஆண்களின் பிறப்புறுப்புகள் சிதைக்கப்படுவதாகவும், ரஷ்ய வீரர்கள் வயக்ரா மருத்துகளை பயன்படுத்துவதை ராணுவ உத்தியாக வைத்துள்ளதாகவும் வாக்குமூலம் தெரியவந்ததாகவும் அவர் கூறினார். 

ரஷ்யா வீரர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தை கேட்கும்போது, மனிததன்மையற்ற முறையில் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவருவதாகவும் பிரமிளா கூறுகிறார். போரின் ஒரு பகுதியாக உக்ரேனியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாலியல் குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையையும் பிரமிளா பட்டன் அந்த பேட்டியின்போது கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், ரஷ்ய ராணுவ ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து இதுபோன்ற 100க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் பதிவாகியுள்ளன என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையானது, ரஷ்ய வீரர்களின் மனிதநேயமற்ற குற்றங்களை உறுதிப்படுத்துவதாக தெரிவித்த பிரமிளா, ரஷ்ய வீரர்களின் பாலியல் குற்றங்களால் 4 வயது முதல் 82 வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | அணு ஆயுத போரை தூண்டுகிறார் ஜோ பைடன்... கட்சியிலிருந்து விலகிய துளசி கப்பார்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News