லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் ஒருவரின் கணக்கில், திடீரென ஒரு கோடிக்கும் அதிகமான தொகை வந்த போது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இந்த பணம் அவருக்கு பரம்பரை சொத்தாக கிடைத்த பணம் தான் என்று வங்கி சொன்னதும் இந்த மகிழ்ச்சி இரட்டிப்பானது. இதையடுத்து அந்த நபர் ஆடம்பரமான வீடு ஒன்றை வாங்கினார்.
இங்கிலாந்தின் நார்போக்கில் வசிக்கும் ரசல் அலெக்சாண்டரின் கணக்கில் சுமார் 1,10,000 பவுண்டுகள் (ரூ.1.09 கோடி) கொஞ்சம் கொஞ்சமாக டெபாசிட் செய்யப்பட்டதாக 'மெயில் ஆன்லைன்' செய்தி தெரிவிக்கிறது. ரசல் தனது கணக்கை சரிபார்த்தபோது, அவர் முதலில் அதிர்ச்சியடைந்தார். ஆனால், பணம் அவருடையது தான் என்றும், அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் வங்கியில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டதும் ரஸ்ஸலின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவர் ஒரு ஆடம்பரமான வீட்டை வாங்கினார், ஆனால் இப்போது கதை முற்றிலும் மாறிவிட்டது. ரஸ்ஸல் கடந்த 40 வருடங்களாக இதே வங்கியின் வாடிக்கையாளராக இருக்கும் நிலையில், வங்கியின் (Bank) தவறால், அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தனது பணம் என எண்ணி சொகுசு வீடு வாங்கிய நிலையில், தற்போது வட்டியுடன் திரும்ப தர வேண்டும் என வங்கி கோருகிறது. வங்கியும், 'மன்னிக்கவும்' என்று வங்கி கூறி பணத்தை வட்டியுடன் திரும்ப கேட்பதால், அந்த நபருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
ALSO READ | ஹூவர் அணை மீது காற்றில் மிதக்கும் பொருட்கள்; புவிஈர்ப்பு விசை தோற்றுப் போவது ஏன்..!!
2020, 29 டிசம்பர் அன்று ரஸ்ஸலின் கணக்கில் £30,000 டெபாசிட் செய்யப்பட்டது. இது குறித்து, வங்கியின் இணையதள சேட் சேவையை தொடர்பு கொண்ட போதிலும், வங்கியில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சிறிது நேரம் கழித்து மீண்டும் அவரது கணக்கில் பணம் டெபாசிட் ஆனதும் வங்கியை தொடர்பு கொண்டார். இந்தப் பணம் அவரது பரம்பரையாக கிடைத்த சொத்தின் ஒரு பகுதி எனவும், அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று வங்கி அதிகாரி தன்னிடம் கூறியதாக ரஸ்ஸல் கூறுகிறார். இதற்குப் பிறகு, ரஸ்ஸலும் அவரது கூட்டாளியும் 2,37,500 பவுண்டுகள் (ரூ. 2.36 கோடி) மதிப்புள்ள புதிய வீட்டை வாங்குவதற்காக தங்களுடைய பழைய ஏழு படுக்கையறை கொண்ட வீட்டை விற்றனர்.
ஆனால், சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, வங்கி தனது தவறை உணர்ந்து, இப்போது 54 வயதான ரஸ்ஸல் முழு பணத்தையும் வட்டியுடன் திருப்பித் தருமாறு கேட்டுள்ளது. ரஸ்ஸலின் கணக்கில் யாரோ தவறுதலாக பணத்தை டெபாசிட் செய்துள்ளதாக வங்கி கூறுகிறது. வங்கி தனது வீட்டை கையகப்படுத்தியுள்ளதாகவும், இதனால், மிகச் சிறிய வீட்டில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் ரஸ்ஸல் குற்றம் சாட்டுகிறார். என் கணக்கில் ஒரு கோடி வரவில்லை என்றால், புதிதாக வீடு வாங்கவே மாட்டேன். வங்கியின் ஒரு தவறு என் வாழ்க்கையை சீரழித்து விட்டது. வங்கி எனக்கு இழப்பீடாக 500 பவுண்டுகள் தருகிறது. அது எனக்கு ஒன்றுக்கு உதவாது என அவர் கூறுகிறார்.
ALSO READ | பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR