பாம்புகள் குறித்த விழிப்புணர்வையும், மக்கள் மனதில் அவற்றைப் பற்றிய தவறான எண்ணங்களையும் நீக்குவதற்காக ஜூலை 16ம் தேதி உலக பாம்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. பாம்புகளை பற்றி பலருக்கும் முழுமையாக தெரிவதில்லை . ஒருபுறம் நாம் பாம்புகளுக்கு மிகவும் பயப்படுகிறோம். மறுபுறம் அதனை கடவுளாகவும் வணங்குகிறோம். பூமியில் 3,000 க்கும் மேற்பட்ட பாம்புகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அண்டார்டிகா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, கிரீன்லாந்து மற்றும் நியூசிலாந்து தவிர எல்லா இடங்களிலும் இவை காணப்படுகின்றன. இந்த அனைத்து உயிரினங்களிலும், சுமார் 600 இனங்கள் விஷம் கொண்டவை. இதில் 200 இனங்கள் மட்டுமே 100% விஷம் கொண்டவை; மனிதர்களைக் கொல்லும் அல்லது காயப்படுத்தும் திறன் கொண்டவை.
இந்தியாவில் உள்ள பாம்புகளும் இதற்கு விதிவிலக்கல்ல. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுமார் 300 பாம்பு இனங்கள் வாழ்கின்றன. அவற்றில் 60 க்கும் மேற்பட்ட விஷம், 40 க்கும் மேற்பட்ட லேசான விஷம் மற்றும் சுமார் 180 விஷமற்றவை. இன்று உலகில் சுமார் 3,458 வகையான பாம்புகள் உள்ளன. வடக்கு கனடாவின் பனிக்கட்டி பிரதேசம் முதல் அமேசானின் பச்சை காடுகள், இமயமலை சமவெளிகள் வரை உலகின் பாலைவனம், கடல் என அனைத்திலும் காணப்படுகிறது.
WHO வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள, இந்தியாவில் 2000 முதல் 2019 வரை பாம்புக்கடியால் இறந்தவர்களின் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தியாவில் இந்த 19 ஆண்டுகளில், 1.2 மில்லியன் (12 லட்சம்) பேர் பாம்புக்கடியால் இறந்துள்ளனர். இது உலகிலேயே மிக அதிகம். புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 58,000 இறப்புகள் இதனால் ஏற்படுகின்றன. பாம்புகள் மற்றும் பாம்பு கடி பற்றிய தவறான புரிதல், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் குறைவான அறிவே இதற்குக் காரணம்.
மேலும் படிக்க | பகீர் வீடியோ: பாம்பை மூக்கில் நுழைத்து வாய் வழியாக வெளியே இழுக்கும் பெண்
மழைக்காலத்தில் பாம்பு கடிக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகம். பாம்புக்கடிக்குப் பிறகு ஏற்படும் இறப்புகளில் கிட்டத்தட்ட 70% இந்தியாவில் கிராமப்புறங்களில் வீட்டில் சிகிச்சையளிப்பதால் நிகழ்கின்றன. கிட்டத்தட்ட 70% வழக்குகள் இந்தியாவின் 8 மாநிலங்களில் பதிவாகியுள்ளன. இந்தியாவில், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்திரபிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் இதில் அடங்கும்.
பாம்பைக் கண்டால் படியே நடுங்கும் என்றாலும், வயல்களில் பாம்பு இருப்பது நல்லது என்பது வெகு சிலருக்கே தெரியும். வயலில் பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை பாம்புகள் உண்ணும். இது தவிர, தானியங்களின் பெரும் எதிரிகளாகக் கருதப்படும் எலிகளையும் பாம்புகள் உண்கின்றன. உலகில் பல விவசாயிகள் பாம்புகளை வளர்க்கிறார்கள். இதனால் தங்கள் பயிர்களை காப்பாற்றி, அவர்களின் கடின உழைப்பு வீணாகாமல் இருக்கும் என்பதால் பாம்புகளை வளர்க்கிறார்கள்.
மேலும் படிக்க | Viral Video: நாகப்பாம்பை கடித்து குதறும் கீரி; மனம் பதற வைக்கும் வீடியோ
சில பாம்புகளின் விஷம் கொடியது என்றாலும், பாம்பு விஷத்திற்கான ஒரே சிகிச்சை ஆன்டி-வெனம் சீரம் அல்லது ஆன்டி-டாக்சின் சீரம் ஆகும். இவையும் பாம்பு விஷத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பல்வேறு வகையான பாம்பு விஷத்திலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் இதய நோய்களை எதிர்த்துப் போராடப் பயன்படும். மேலும், உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதில் பாம்பு விஷத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு போன்றவற்றில் கூட, பாம்பு விஷத்தால் தயாரிக்கப்படும் மருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜர்ரகா பிட் விப்பர் பாம்பின் விஷத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் வேறு எந்த உயிரினமும் இல்லாத அளவுக்கு மனித உயிர்களைக் காப்பாற்றியுள்ளன.
மேலும் படிக்க | Viral Video: பாம்பை கொத்திக் குதறும் பறவைகள்; மனம் பதற வைக்கும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ