#GoodMorningCMSir; ஆந்திராவில் நூதன போராட்டம்; ட்ரெண்டாகும் ட்விட்டர் பதிவுகள்

தென்மேற்குப் பருவ மழை தற்போது தீவிரம் அடைந்து வருm நிலையில், மழை காரணாமாக, ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில், சாலைகள் படு மோசமாக உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.   

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 16, 2022, 02:51 PM IST
  • வலுடையும் தென்மேற்கு பருவ மழை.
  • மழை காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பெரும் பாதிப்பு.
  • மோசமாக உள்ள சாலைகளின் புகைப்படங்கள் வீடியோ ட்ரெண்டிங்.
#GoodMorningCMSir; ஆந்திராவில் நூதன போராட்டம்; ட்ரெண்டாகும் ட்விட்டர் பதிவுகள் title=

ஆந்திராவில் சாலைகள் மோசமாக உள்ளதால் 'குட்மார்னிங் சிஎம் சார்' என்ற கோஷத்துடன் நூதன போராட்டம் நடந்து வருகிறது. ட்விட்டரிலும் இது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பவன் கல்யாண் தொடங்கி வைத்துள்ள இந்த நூதன போராட்டத்திற்கு ஆதரவு வலுத்து வருகிறது. தென்மேற்குப் பருவ மழை தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. அடை மழை காரணமாக, மாநிலங்களின் பல பகுதிகளில் சாலைகள் படு மோசமாக உள்ளது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மேற்கண்ட நூதனப் போராட்டம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த நூதன போராட்டம் பிற  மாநிலங்களிலும் பரவுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதல்வரை தூக்கத்திலிருந்து எழுப்ப மக்கள் போராட்டத்தில் இறங்குவார்களா என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கன மழையில் பல சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. சாலைகள் மோசமாக உள்ள பகுதிகளின் புகைப்படங்களை எடுத்து, அதன் தொகுதி விபரங்களை குறிப்பிட்டு, பலர் பதிவிட்டு வருகின்றனர். 

 

 

 

 

 

மேலும் படிக்க | பிரிட்டனின் ‘அத்திப்பட்டி’; மாயமான கிராமத்தை வெளிகொணர்ந்த வெப்பம்

 

 

 

மேலும் படிக்க | In Pics: பிரதமர் இன்று துவக்கி வைக்க உள்ள புந்தேல்கண்ட் விரைவுச் சாலை

மேலும் படிக்க | குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி: இழப்பீடு 60000 ரூபாயாக உயர்ந்தது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News