காசிமேடு மீன்படி பகுதியில் 131 டன் கழிவுகள் நீக்கம்!
சென்னை மாநகராட்சியுடன் சென்னை காவல்துறை இணைந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தினை துப்புரவு செய்யும் பணியினை சென்னை கமிஷ்னர் AK விஷ்வநாதன் துவங்கி வைத்தார்!
சென்னை மாநகராட்சியுடன் சென்னை காவல்துறை இணைந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தினை துப்புரவு செய்யும் பணியினை சென்னை கமிஷ்னர் AK விஷ்வநாதன் துவங்கி வைத்தார்!
இப்பணியை துவங்கி வைத்தது மட்டும் அல்லாமல் தானும் களத்தில் இரங்கி துப்பரவு செய்யும் பணியில் ஈடுப்பட்டார். அவருடன் அப்பகுதி ஆர்வளர்களும் இணைந்து இப்பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த துப்பரவு பணியில் சுமார் 500 காவல்துறை அதிகாரிகள், 150 மீனவர்கள், 50 மாநகராட்சி ஊழியர்கள் என ஏராளமானோர் ஈடுப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 32 மீனவர் சங்கங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இவர்களுடன் இணைந்து செயல்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பணியின் போது பழுதடைந்த படகுகளை கடற்கரையில் இருந்து நீக்குதல் போன்ற செயல்பாடுகளும் நிகழ்ந்தது. இதன்மூலம் சுமார் 131 டன் கழிவு பொருட்களினை அப்புரப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதி ஆர்வளர்கள் வரும் வாரங்களில் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்!