மாஸ்கோ: ரஷியாவின் சைபீரியா கெம்ரோவோ நகரத்தில் உள்ள நேற்று விடுமுறை என்பதால் இங்குள்ள ஷாப்பிங் மாலில் பொதுமக்கள் பலர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். தகவலறிந்து அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


இந்த தீ விபத்தில் சிக்கி 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர் என்றும், மேலும், 30-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் முதல் கட்டமாக தகவல் வெளியானது.


 இந்நிலையில், சைபீரியா ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீயை அணைக்க வீரர்கள் போராடினர். சுமார் 12 மணி நேரம் கழித்து வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அருகிலுள்ள் கட்டிடங்களிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.



மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.