பக்கோடாவிலிருந்து பான் மசாலாவிற்கு முன்னேறிய பாஜக -சீத்தாராம் யெச்சூரி தாக்கு
புதிய இந்தியாவைப் படைக்கும் பாஜகவின் அற்புதமான திட்டங்கள் தான் பக்கோடா மற்றும் பான் மசாலா என சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி திரிபுரா மாநிலத்தில் நடக்கிறது.
நேற்று திரிபுரா கால்நடைத்துறை கவுன்சில் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பேசிய அம்மாநில முதலவர் பிப்லப் குமார் தேவ் கூறியதாவது:-
அரசு வேலைக்காக காத்திருந்து காலத்தை வீணடிக்காமல் பீடா கடை வைத்தோ அல்லது மாடு மேய்க்கும் தொழிலிலோ செய்து இளைஞர்கள் முன்னேற வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார்.
அம்பேத்கரை பிராமணர் என்று அழைக்கலாம்: மீண்டும் சர்ச்சை பேச்சு!!
முன்னதாக சாலையோரத்தில் கடை அமைத்து, பக்கோடா விற்று 200 ரூபாய் சம்பாதிப்பதுகூட முன்னேற்றம்தான் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதேபோல பிச்சை எடுப்பதைவிட பக்கோடா விற்பதும் ஒரு வேலைதான். வேலை இல்லாமல் இருப்பதைவிட பக்கோடா விற்பது எவ்வளவோ மேல். இதில் எந்த அவமானமும் இல்லை என கூறியிருந்தார் அமித் ஷா.
அன்னை தமிழை அவமானபடுத்தும் மத்திய அரசு -ஸ்டாலின்!
இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:-
பக்கோடாவிலிருந்து பான் மசாலாவிற்கு முன்னேறியிருக்கிறது பாஜக...
பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாட்டு இளைஞர்களை பக்கோடா விற்கச் சொன்னார். அவரால் தேர்வு செய்யப்பட்டு திரிபுராவில் அமர்த்தப்பட்டிருக்கிற மனிதர் இளைஞர்களை பான் மசாலா விற்கச் சொல்கிறார்.
பக்கோடாவிலிருந்து பான் மசாலாவிற்கு முன்னேறியிருக்கிறது பாஜக. புதிய இந்தியாவைப் படைக்கும் இவர்களது அற்புதமான திட்டங்கள்தான் இவை என கூறியுள்ளார்.