500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு! ரிசர்வ் வங்கி அப்டேட்!
500 rupee note Latest Update: கரன்சி புழக்கம் தொடர்பான ரிசர்வ் வங்கியின் முக்கிய செய்தி! 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு தான் இருக்கிறதாம்...
நாட்டில் புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளின் பங்கு, மார்ச் 2024 க்குள் 86.5 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய ரிசர்வ் வங்கி, அதே நேரத்தில் இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 77.1 சதவீதமாக நோட்டுகளின் புழக்கம் இருந்தது என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.
மத்திய ரிசர்வ் வங்கி இன்று (2024 மே 30) வெளியிட்ட ஆண்டறிக்கையில், கடந்த ஆண்டு மே மாதம் ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டதே ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவின் காரணமாக, ரூ.2,000 நோட்டுகளின் பங்கு கடந்த ஆண்டு இதே காலத்தில் 10.8 சதவீதத்தில் இருந்து 0.2 சதவீதமாக குறைந்துள்ளது.
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று 2016ம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்தது. அரசாங்கத்தின் இந்த பணவிலக்க முடிவை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ரூ.2,000 மதிப்புள்ள புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.
2018-19ல் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது, அதன்பிறகு கடந்த ஆண்டு மே 19ம் தேதி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களின் புழக்கத்தை ஆர்பிஐ தடை செய்தது.
2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவால், பணப்புழக்கத்தில் சரிவு ஏற்பட்டிருந்ததாக ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதத்தில் தெரிவித்திருந்தது. 2024 பிப்ரவரி 9ம் நாள் நிலவரப்படி, ரிசர்வ் பணத்தின் (RM) வளர்ச்சி 5.8 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
மேலும், ரிசர்வ் வங்கியின் மிகப்பெரிய அங்கமான CiC என்ன ரொக்க பண புழக்கம், ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த 8.2 என்ற அளவில் இருந்து இலிருந்து 3.7% ஆகக் குறைந்துள்ளது. 2000 ரூபாய் நோட்டை திரும்பப்பெறும்போது, ‘Clean Note Policy’ கொள்கையின் அடிப்படையில் கரன்சி நோட்டுகளை திரும்பப் பெற்றதாக மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது.தரமான ரூபாய்த் தாள்கள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதை இந்த கொள்கை உறுதி செய்யும் என குறிப்பிட்டிருந்து.
கடந்த ஆண்டு மே மாதம் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், கிட்டத்தட்ட 89 சதவிகித 2,000 ரூபாய் நோட்டுகள் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் வழங்கப்பட்டவை என்று குறிப்பிட்டிருந்தது. அந்த நோட்டுக்களின் ஆயுட்காலம் 4 முதல் 5 வருடங்கள் தான் என்றும் தெரிவித்திருந்தது.
மேலும் படிக்க | சீனியர் சிட்டிசன்களிடம் இருந்து அரசு அதிக வருமான வரி ஈட்டுகிறதா? தெளிவான விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ