’லித்தியம் புதையல்’ ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிப்பு..! 5.9 மில்லியன் டன்
ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் உலோகத்தின் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எலக்ட்ரானிக் வாகன பேட்டரி தயாரிப்பாளர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.
லித்தியம் புதையல்’ கண்டுபிடிப்பு
இந்தியா இப்போது எலக்டிரிக் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாடுகளை ஊக்குவித்து வருகிறது. 2030 ஆண்டுகளுக்குள் அனைத்து இடங்களிலும் எலக்டிரிக் வாகன பயன்பாட்டை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் வகுத்து வருகிறது. இப்படியான சூழலில் மத்திய சுரங்க அமைச்சகம் இப்போது பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜம்மு காஷ்மீரியில் 5.9 மில்லியன் டன் லித்தியம் உலோகத்தின் புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | மாச கரண்ட் கட்டை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்..! இதோ வழிமுறை
மத்திய அரசு அறிக்கை
சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால்-ஹைமானா பகுதியில் லித்தியம் உலோகத்தின் இருப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது எலக்டிரிக் வாகனங்களின் பேட்டரி தயாரிப்புக்கான மூலப் பொருள். மிகப்பெரிய நிலவியல் ஆய்வு மூலம் இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர்த்து கர்நாடகா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட ஆய்வில் மாண்டியா மாவட்டத்தில் 1,600 டன்கள் விலைமதிப்பற்ற லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எலக்டிரிக் வாகன சந்தை
2030 ஆம் ஆண்டுக்குள் விற்கப்படும் அனைத்து தனியார் கார்களில் 30 சதவிகிதம் EV-களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், வணிக வாகனங்கள் மற்றும் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், அதாவது அரசு வாகனங்கள் உட்பட அனைத்தும் 70 மற்றும் 80 சதவீதம் எலக்டிரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் லித்தியம் உலோகத்துக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ