மாச கரண்ட் கட்டை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்..! இதோ வழிமுறை

மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படுவதை தமிழக மின்சாரத்துறை இணையதளத்திற்கு சென்று முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 9, 2023, 07:35 PM IST
 மாச கரண்ட் கட்டை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்..! இதோ வழிமுறை title=

தமிழக மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளின் சேவைகளும் ஆன்லைன் வழியாகவே பெற்றுக் கொள்ளும் வகையில், சேவைகள் மற்றும் தகவல்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வீட்டில் இருந்தபடியே உங்களுக்கு வேண்டும் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். இணைய சேவை மட்டும் இருந்தால்போதும். ரேஷன் கார்டு அப்ளை, அதன் தற்போதைய நிலை, அவற்றின் முகவரி மாற்றம், மாற்றப்பட்ட முகவரி விண்ணப்பத்தின் நிலை, பெயர் சேர்த்தல் நீக்குதல் உள்ளிட்ட தகவல்களை ஆன்லைனிலேயே மேற்கொள்வது போல், மின்சாரத்துறையிலும் சில சேவைகளை ஆன்லைன் வழியாகவே பெற்றுக் கொள்ளலாம்.

உதாரணமாக வீட்டு மின் எண்ணுடன், ஆதார் இணைப்பு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே விளக்கும் கொடுத்துள்ளார். அதன்படி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள், குறிப்பிட்ட தேதிக்குள் சென்று தங்களின் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைத்துவிட வேண்டும். ஒருவேளை உங்கள் எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், மின்சாரத்துறையின் https://www.tangedco.gov.in/ என்ற பக்கத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். இதேபோல், மாதம் மாதம் அனைத்து பகுதிகளிலும் மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.

மேலும் படிக்க | விவசாயிகளுக்கான நிதி பலன் அதிகரிப்பு? - மத்திய அரசு கொடுத்த பதில்!

அந்த பகுதியில் நடைபெறும் பரமாரிப்பு பணிகளுக்காக இந்த மின் நிறுத்தம் என்பதை மின்சாரத்துறை மூலம் அறிவிக்கப்படும். உள்ளூர் பேப்பர்களிலும் மின் நிறுத்தம் என்பது வெளியிடப்படும். இந்நிலையில், இதனை இப்போது வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வழியாகவே தெரிந்து கொள்ளலாம்.

மின் நிறுத்தத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?

* மின்சாரத்துறையின் https://www.tangedco.gov.in/ பக்கத்துக்கு செல்லவும்
* அதில் Consumer Info என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* பின்னர் Scheduled outage information என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
* இதனைத் தொடர்ந்து உங்கள் மாவட்டத்தின் பெயரை குறிப்பிடவும்
* அதில் அந்த மாவட்டத்தில் குறிப்பிட்ட நாளில் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்களின் பெயர்கள் இருக்கும்
* நாளைய மின் நிறுத்தம் குறித்த தகவல் இருக்காது. இன்றைய மின் நிறுத்த பகுதிகள் மட்டும் இருக்கும் என்பதால் நாள்தோறும் காலை நேரத்தில் இந்த வழிமுறையை பின்பற்றி மின்நிறுத்தம் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | எப்புட்றா..இனி ரேஷன் கார்டு இல்லாமலே ரேஷன் பொருட்களை பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News