DA Hike Calculator: மகிழ்ச்சியில் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், வந்தது டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு.. கணக்கீடு இதோ
DA Hike Calculator as per 7th Pay Commission: மத்திய அரசு அகவிலைப்படியை 4% அதிகரித்து, அதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 50% அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை பெறுவார்கள்.
DA Hike Calculator as per 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருந்த நல்ல செய்தி வந்துவிட்டது. மத்திய அரசு அகவிலைப்படியை 4% அதிகரித்து, அதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஜனவரி 2024 முதல் 50% அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணத்தை பெறுவார்கள்.
அனைவரும் எதிர்பார்த்தபடி, ஹோலி பண்டிகைக்கு முன்னதாகவே மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த அறிவிப்பும் மத்திய அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இந்த தகவலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள அகவிலைப்படி அதிகரிப்பால், அரசு கருவூலத்திற்கு ஆண்டுக்கு ரூ.12,869 கோடி சுமை கூடும். டிஏ அதிகரித்துள்ள (DA Hike) நிலையில், அதைத் தொடர்ந்து போக்குவரத்து அலவன்ஸ், டெபுடேஷன் அலவன்ஸ், கேன்டீன் அலவன்ஸ் ஆகியவற்றிலும் 25 சதவீதம் உயர்வு இருக்கும். ஊழியர்களின் மாத சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகின்றது?
அடிப்படை சம்பளத்துடன் (Basic Salary) கிரேடு சம்பளத்தை சேர்த்த பிறகு கிடைக்கும் சம்பளம் அகவிலைப்படி விகிதத்தால் பெருக்கப்படுகிறது. இதன் பெருக்கல் தொகை தான் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகும்.
அதாவது, டிஏ தொகை = (அடிப்படை ஊதியம் + கிரேட் பே) x அகவிலைப்படி சதவிகிதம்
(DA Amount = (Basic Pay + Grade Pay) x DA %)
மேலும் படிக்க | கம்மி விலையில் LPG சிலிண்டரை வாங்கணுமா? உடனே இதை பண்ணுங்க
DA Hike: வெவ்வேறு அடிப்படை சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும்?
உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்
அடிப்படை ஊதியம் ரூ.15,000
- ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ.15 ஆயிரம் என வைத்துக்கொள்வோம்.
- ரூ.15 ஆயிரத்தில் 50% = ரூ.7500
-மொத்த சம்பளம் (டிஏ+அடிப்படை சம்பளம்)=ரூ.22,500
- 46% அகவிலைப்படியில், 15,000 ரூபாய் அடிப்படை ஊதியத்தில் கிடைத்த ஊதியம் = ரூ.21,900
- 50% அகவிலைப்படியில், 15,000 ரூபாய் அடிப்படை ஊதியத்தில் கிடைக்கும் ஊதியம் = ரூ.22,500.
- டிஏ 4% அதிகரித்த பிறகு ஊதியத்தில் ஏற்பட்டுள்ள ஏற்றம்=22,500-21,900 = ரூ.1,600
அடிப்படை ஊதியம் ரூ.50,000
- ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரம் என வைத்துக்கொள்வோம்.
- ரூ.15 ஆயிரத்தில் 50% = ரூ.25,000
-மொத்த சம்பளம் (டிஏ+அடிப்படை சம்பளம்)=ரூ.75,000
- 46% அகவிலைப்படியில், 50,000 ரூபாய் அடிப்படை ஊதியத்தில் கிடைத்த ஊதியம் = ரூ.73,000
- 50% அகவிலைப்படியில், 73000 ரூபாய் அடிப்படை ஊதியத்தில் கிடைக்கும் ஊதியம் = ரூ.75,000
- டிஏ 4% அதிகரித்த பிறகு ஊதியத்தில் ஏற்பட்டுள்ள ஏற்றம்=75,000-73,000 = ரூ.2,000
அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கீடு
அகவிலைப்படி % = (கடந்த 12 மாதங்களில் (ஏஐசிபிஐ -இன் சராசரி (அடிப்படை ஆண்டு - 2001=100) -115.76)/115.76) *100
மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கீடு
அகவிலைப்படி % = ( கடந்த 3 மாதங்களில் (ஏஐசிபிஐ -இன் சராசரி (அடிப்படை ஆண்டு - 2001=100) -126.33)/126.33) *100
டிஏ அதிகரிப்புக்கு பிறகு சம்பளத்தில் இந்த கூறுகளும் அதிகரிக்கும்:
- பயணக் கொடுப்பனவு
- கேன்டீன் அலவன்ஸ்
- டெபுடேஷன் அலவன்ஸ்
- X,Y,Z நகரங்களில் 27, 18, 9 ஆக இருந்த வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) 30, 20, 10 சதவிகிதமாக அதிகரிக்கும்.
ஏழாவது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் படி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ