7வது ஊதியக்குழு சமீபத்திய புதுப்பிப்பு: தீபாவளி வருவதற்கு முன்பே, துறையில் பணிபுரியும் ஊசியர்களுக்கு மத்திய அரசு தனது பெட்டகத்தை திறந்து பல நல்ல செய்திகளை அளித்துள்ளது. ஊழியர்களுக்கு முதல் பரிசாக, செப்டம்பர் மாதம் ஊழியர்களின் அகவிலைப்படியை அரசாங்கம் உயர்த்தியது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படியும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மத்திய ஊழியர்களுக்கு மற்றொரு சந்தோஷமான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் இப்போது பதவி உயர்வு (ப்ரொமோஷன்) அல்லது அலுவலக மதிப்பீடு பரிசு (அப்ரெய்சல்) பெறக்கூடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிசம்பரில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு


மத்திய அரசு ஊழியர்களின் அப்ரெய்சல் தற்போது நிலுவையில் உள்ளது. இதுதவிர ஊழியர்களுக்கு பதவி உயர்வும் அளிக்கப்படவுள்ளது. ஊழியர்களின் சுய மதிப்பீட்டு, அதாவது அப்ரெய்சல் படிவம் நிரப்பப்பட்டுள்ளது. டிசம்பரில் மத்திய ஊழியர்கள் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகிறது. இவை தவிர, மத்திய ஊழியர்களின் 18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்தும் பேசப்படக்கூடும்.


7வது ஊதியக்குழுவின் கீழ் பதவி உயர்வு வழங்கப்படும்


மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. ஜூலை வரை அனைத்து துறைகளின் சுயமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் ஆய்வு பணியும் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான கோப்பு அடுத்த நிலைகளுக்கு சென்றவுடன் ஊழியர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம். 


மேலும் படிக்க | 7th Pay Commission இரட்டை பொனான்சா: அகவிலைப்படியை தொடர்ந்து பயணப்படியும் உயர்ந்தது 


பதவி உயர்வு கிடைத்தவுடன், ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய உயர்வு ஏற்படும். டிசம்பருக்குள் மதிப்பீடு முடிக்கப்படும். 7வது ஊதியக்குழுவின் கீழ் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்படும்.


அகவிலைப்படி நிலுவைத் தொகை பற்றியும் முடிவு செய்யப்படலாம்


மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக அகவிலைப்படி நிலுவையை கோரி வருகின்றனர். மத்திய ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான டிஏ அரியர் வழங்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. ஆனால், இதுவரை மத்திய அரசுடன் இது குறித்த பேச்சு வார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை. எனினும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் தலையீட்டை ஓய்வூதியதாரர்கள் அமைப்பு கோரியிருந்தது. இப்போது நவம்பரில் அமைச்சரவை செயலாளருடனான சந்திப்பும் நடைபெற உள்ளது. இதில், நிலுவைத் தொகை வழங்குவது குறித்து உடன்பாடு ஏற்படும் என, பணியாளர் அமைப்பு நம்புகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission: தீபாவளி போனஸ், டிஏ ஹைக், ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ