அகவிலைப்படி உயர்வுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டுமா? எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு விகிதம் மூலம் 41.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் .  

Written by - RK Spark | Last Updated : Oct 11, 2022, 11:58 AM IST
  • அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி, 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • இதன் மூலம் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
  • டிஏ மற்றும் டிஆர் என்பது அடிப்படை சம்பளத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டுமா? எவ்வாறு கணக்கிடப்படுகிறது? title=

சமீபத்தில் 7வது ஊதியக் குழு விகித உயர்வை நடைமுறைப்படுத்த நிதி அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்திருந்தது, மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி, 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தியது.  இதேபோல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணத்தையும் (டிஆர்) அமைச்சரவை அறிவித்தது.  அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும்(டிஏ), ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும்(டிஆர்) வழங்கப்படுகிறது.  மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு விகிதம் மூலம் 41.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | 8th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, 44%-க்கும் மேலாக அதிகரிக்கும் ஊதியம்

 

இப்போது உயர்த்தப்பட்டுள்ள 4% உயர்வானது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் அடிப்படை ஊதியத்திற்கு பொருந்தும்.  பொதுவாக அரசாங்கம் ஊழியர்களின் டிஏ மற்றும் டிஆரில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை திருத்தும் மேற்கொள்ளும், இது பணவீக்கம் போன்றவற்றிலிருந்து ஊழியர்களை நிதி சிக்கல் இல்லாமல் காப்பாற்ற உதவுகிறது.  50 பைசா மற்றும் அதற்கும் மேலான பின்னங்கள் உள்ளடங்கிய அகவிலைப்படியின் கணக்கில் செலுத்தப்படும் தொகையானது அதிக ரூபாயாக மாற்றப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஏ மற்றும் டிஆர் என்பது அடிப்படை சம்பளத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக கணக்கிடப்படுகிறது , இது ஹெச்ஆர்ஏ போன்ற பிறவகையான அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படுகின்றது.  ஹெச்ஆர்ஏ என்பது ஒரு ஊழியர் அவர் தங்குவதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கும்போது ஏற்படும் செலவுகளை சமாளிக்க முதலாளி வழங்கக்கூடிய சம்பளமாகும், இந்த தொகையானது தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு பொருந்தும்.  சம்பளத்துடன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் டிஏக்கு முழுமையாக வரி விதிக்கப்படும், வருமான வரிச் சட்டம் டிஏ மற்றும் சம்பளத்திற்கான வரிப் பொறுப்பு தாக்கல் செய்யப்பட்ட ரிட்டனில் தெரிவிக்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கிறது அகவிலைப்படி, டிஏ 41% ஆக உயரும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News