7th Pay Commission: தீபாவளி போனஸ், டிஏ ஹைக், ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்

7th Pay Commission DA Hike: மத்திய அரசு சமீபத்தில் ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியை அளித்தது. இதனால் ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 14, 2022, 01:00 PM IST
  • நரேந்திர மோடி அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவை விரைவில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஊகங்கள் பரவி வருகின்றன.
  • அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது.
  • ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.
7th Pay Commission: தீபாவளி போனஸ், டிஏ ஹைக், ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்  title=

7th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி, மத்திய அரசு சமீபத்தில் ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியை அளித்தது. இதனால் ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி போனஸ் அறிவிப்பும் வந்துள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலம் சற்று முன்னதாகவே தொடங்கிவிட்டது என்றே கூறலாம். கடந்த மாதம், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) ஜூலை 1, 2022 முதல் 4% உயர்த்தியது. இந்த 4% உயர்வுக்குப் பிறகு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இது தவிர, 2021-22 நிதியாண்டில் ரயில்வே ஊழியகளுக்கு 78 நாட்களுக்கு சமமான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் (PLB) வழங்கவும் இந்த வாரம் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

விரைவில் 8வது ஊதியக்குழு 

ஊதியம் குறித்த இந்த அறிவிப்புகளுக்கு மத்தியில், நரேந்திர மோடி அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவை விரைவில் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஊகங்கள் பரவி வருகின்றன. மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுக்காக கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ஊதியக் கமிஷன் அமைக்கப்பட்டது என்பதை அரசு ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டும். 5, 6 மற்றும் 7 வது ஊதியக் குழுக்கள் மூலம் காணப்பட்ட போக்குகளின் படி, 8வது ஊதியக் குழு 2023 இல் அமைக்கப்படும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. இருப்பினும், மத்திய அரசால் இன்னும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: இந்த வசதியை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தது அரசு 

அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, ஜூலை 1, 2022 முதல் அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணத்தை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை செப்டம்பர் 28 அன்று ஒப்புதல் அளித்து அறிவிப்பினை வெளியிட்டது. அரசின் இந்த நடவடிக்கையால் 41.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர்.

குறிப்பிடத்தக்க வகையில், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் சமீபத்திய ஊதியம்/ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 34 சதவீதத்தை விட 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஜூன், 2022 இல் முடிவடைந்த காலத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிக்கப்படுகின்றன. 

உயர்த்தப்பட்ட அகவிலைப்படியால், கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ.6,591.36 கோடி அளவிலும், 2022-23ல் (ஜூலை, 2022 முதல் பிப்ரவரி, 2023 வரையிலான 8 மாதங்கள்) ரூ.4,394.24 கோடி அளவிலும் தாக்கம் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

ரயில்வே ஊழியர்களுக்கு 2021-2022 நிதியாண்டிற்கான போனசை அரசு அறிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன்-இணைக்கப்பட்ட போனஸ் வழங்க மத்திய அரசு அக்டோபர் 12 அன்று ஒப்புதல் அளித்தது. இது அரசு ஊழியர்களுக்கு தீபாவளிப் பண்டிகைக்கான பரிசாக வழங்கப்படுகின்றது. 2021-22 நிதியாண்டில் RPF/RPSF பணியாளர்களைத் தவிர்த்து நான் கெசடட் இரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன்-இணைக்கப்பட்ட போனஸ் (PLB) வழங்கப்படும்.

ரயில்வே அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையால், சுமார் 11.27 லட்சம் நான் கெசடட் ரயில்வே ஊழியர்கள் இந்த முடிவின் மூலம் பயனடைய உள்ளனர். ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான PLB-ஐ செலுத்தியதன் நிதித் தாக்கம் ரூ.1,832.09 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அகவிலைப்படி உயர்வுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டுமா? எவ்வாறு கணக்கிடப்படுகிறது? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News