7வது ஊதியக் குழு, சமீபத்திய அப்டேட்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நவராத்திரி பண்டிகைக் காலத்துக்கு முந்தைய கடைசி அமைச்சரவைக் கூட்டம் 2023 அக்டோபர் 11 புதன்கிழமை, அதாவது இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை அளிக்கும் வகையில் அரசு தற்போது இந்த அறிவிப்பை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின்போது, மத்திய ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி குறித்து மோடி அரசு ஒரு முக்கிய முடிவை எடுக்கக்கூடும் என பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள். அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் அதிகரித்து, மொத்த அகவிலைப்படியை 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்த்த அதிக வாய்ப்பு உள்ளது. எனினும், ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்து மொத்த அகவிலைப்படியை 46 சதவிகிதமாக அதிகரிக்கும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வர உள்ளது. ஊழியர்கள் அக்டோபர் மாதத்திற்கான உயர்த்தப்பட்ட சம்பளத்தையும், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நிலுவைத் தொகையையும் பெறுவார்கள். 


இந்தியாவில் நவராத்திரி பண்டிகை அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 24-ஆம் தேதி தசராவுடன் முடிவடைகிறது. நவராத்திரிக்கு முன்னதாக, பண்டிகைக் காலத்தில் இப்படிப்பட்ட நல்ல அறிவிப்புகளை வழங்குவது மத்திய அரசின் வழக்கம்தான். இந்த அறிவிப்பு வெளியானால், இதனால் 47 லட்சம் ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். கடந்த ஆண்டு நவராத்திரிக்கு முன்னதாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் (Cabinet Meeting) மோடி அரசு அகவிலைப்படியை உயர்த்தியது நினைவிருக்கலாம். 


மேலும் படிக்க | 8th Pay Commission அட்டகாசமான அப்டேட்: 50% டிஏ..அதைத் தொடர்ந்து புதிய ஊதியக்குழு!!


தொழிலாளர் பணியகத்தால் மாதந்தோறும் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி (Dearness Allowance)  கணக்கிடப்படுகிறது. மத்திய ஊழியர்கள் 4 சதவீத உயர்வு எதிர்பார்க்கும் நிலையில், டிஏ உயர்வு (DA Hike) 3 சதவீதம் இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் சிரமத்தை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகின்றது. 


அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்தால், 


குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ 18,000 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்


ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - மாதம் 18,000 ரூபாய்


புதிய அகவிலைப்படி (46%) - மாதம் ரூ 8280
இதுவரையிலான அகவிலைப்படி (42%) - மாதம் ரூ. 7560
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 8280-7560 = ரூ. 720
ஆண்டு ஊதிய உயர்வு 720X12 = ரூ.8640


அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ 56,900 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்


ஊழியர்களின் அடிப்படை சம்பளம் = மாதம் ரூ 56,900


புதிய அகவிலைப்படி (46%) = மாதம் ரூ 26,174
இதுவரையிலான அகவிலைப்படி (42%) = மாதம் ரூ. 23,898 
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 26,174-23,898 = ரூ. 2,276 மாதத்திற்கு
ஆண்டு ஊதிய உயர்வு = 2276X12= ரூ. 27,312


இந்த மாநிலங்கள் டிஏவை உயர்த்தியுள்ளன


சமீபத்தில், மத்திய பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பல மாநில அரசுகள் தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியுள்ளன.


மேலும் படிக்க | NPS முதலீடு... கட்டுக்கதைகளும் விளக்கங்களும்... நிபுணர் கூறுவது என்ன!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ