NPS முதலீடு... கட்டுக்கதைகளும் விளக்கங்களும்... நிபுணர் கூறுவது என்ன!

NPS உத்தரவாதமான வருமானத்தை வழங்காது என்பது போன்று பல தவறான எண்ணங்கள் மக்கள் மத்தியில் காணப்படும் நிலையில், இது குறித்து நிபுணர் அளித்துள்ள விளக்கங்களை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 11, 2023, 11:17 AM IST
  • குழந்தைகளிடமிருந்து தனித்து வாழும் நிலையில் உள்ள பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஏற்ற ஓய்வூதிய திட்டம்.
  • மருத்துவ அவசரநிலை போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக, பகுதியளவு திரும்பப் பெறலாம்.
NPS முதலீடு... கட்டுக்கதைகளும் விளக்கங்களும்... நிபுணர் கூறுவது என்ன! title=

NPS முதலீடு: தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension System - NPS) என்பது ஓய்வூதியத்தைத் திட்டமிடுவதற்கான பாதுகாப்பான வழி, வருமானத்துடன் கூடவே வரிச் சலுகைகள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான பல வாய்ப்புகளையும் இந்த திட்டம் வழங்குகிறது. NPS கணக்கை திறம்பட நிர்வகித்தல் மற்றும் அதன் பலன்களை அதிகப்படுத்துவதன் மூலம், ஒருவர் தனது செல்வத்தை பெருக்கிக் கொள்ளும் அதே வேளையில், நிதி ரீதியாக வசதியான ஓய்வூதியத்தைப் பெற முடியும் என்பதால், இது ஓய்வூதியத் திட்டமிடலில் மிக அதிகம் விரும்பப்படும் தேர்வாக உள்ளது. இருப்பினும், தற்போது NPS திட்டத்தில் முதலீடு செய்பவர்களை பயமுறுத்தும் வகையில், அதை சுற்றி பரவும் கட்டுக்கதைகளுக்கு பஞ்சமில்லை. இதைப் பற்றி பேசுகையில், டாடா பென்ஷன் மேனேஜ்மென்ட்டின் தலைமை செயல் அதிகாரி குரியன் ஜோஸ், NPS பற்றிய சில பொதுவான கட்டுக்கதைகளையும், தவறான தகவலைச் சுற்றியுள்ள உண்மையான யதார்த்தத்தையும் பகிர்ந்து கொள்கிறார்:

NPS திட்டம் குறித்த கட்டுக்கதை 1: "ஓய்வு பெறுவதைப் பற்றி சிந்திக்க நான் மிகவும் இளமையாக இருக்கிறேன்"

ஓய்வு பெறுவதைப் பற்றி சிந்திக்க இந்த வயது தான் சிறந்தது என இல்லை என்று அவர் கூறுகிறார். "நீங்கள் எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு நேரம் உங்கள் முதலீடுகளை கூட்டி, அதன் மூலம் நம்பிக்கையான ஓய்வு பெற்ற வாழ்க்கையை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். 10 ஆண்டுகளில் ரூ. 1 கோடி சேமிப்பதை விட, 30 ஆண்டுகளில் ரூ. 1 கோடி சேமிப்பது எளிது," ஜோஸ் விளக்குகிறார்.

NPS திட்டம் குறித்த கட்டுக்கதை 2: "என் குழந்தைகள் என்னை கவனித்துக்கொள்வார்கள்"

டாடா பென்ஷன் மேனேஜ்மென்ட்டின் தலைமைச் செயல் அதிகாரி, ஒருவரின் குழந்தைகள் அவர்களைக் கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை மிகவும் பொதுவான ஒன்று என்று பகிர்ந்து கொள்கிறார். பல குழந்தைகள் தங்கள் வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ளும்போது, ​​ஓய்வூதியத் (Old Age Pension) தேவைகளுக்காக ஒருவர் தங்கள் குழந்தைகளை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது என்பதை அறிந்து கொள்வது அவசியம் என்பதை தெளிவுபடுத்துகிறது. அவர் மேலும் கூறுகிறார், "வெளிநாட்டிலோ அல்லது வேறு நகரத்திலோ வேலை செய்யும் குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர்களிடம் இருந்து தனித்து வாழும் நிலையில் உள்ள பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உங்கள் குழந்தைகளைச் சார்ந்து இல்லாமல் உங்கள் ஓய்வூதியத்தைத் திட்டமிட வேண்டும்."

NPS திட்டம் குறித்த கட்டுக்கதை 3: "PPF தான் ஓய்வு பெறுவதற்கான சிறந்த வழி"

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது ஓய்வூதிய திட்டமிடலுக்கான விருப்பங்களில் ஒன்றாகும். இருப்பினும், "பிரிவு 80 சிசிடி(1) பிரிவு 80 சிசிடி(1பி) மற்றும் பிரிவு 80 சிசிடி (2) ஆகியவற்றுடன் இணைந்தால், ரூ.9.50 லட்சம் வரை அதிக வரிச் சலுகைகளை வழங்குவதால், என்பிஎஸ் சாதகமாக உள்ளது. நீண்ட காலத்திற்கு சந்தை இணைக்கப்பட்ட வருமானத்தை ஈட்டுவதற்கு மிகவும் சிறந்தது" என ஜோஸ் இது குறித்து கூறுகிறார்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான செம ஜாக்பாட்.. டபுள் வருமானம் கிடைக்கும்

NPS திட்டம் குறித்த கட்டுக்கதை 4: "என்பிஎஸ் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே"

ஜோஸின் கூற்றுப்படி, இது மிகவும் பொதுவான தவறான கருத்துக்களில் ஒன்றாகும். "என்பிஎஸ் ஆரம்பத்தில் அரசு ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அது தனியார் துறையில் உள்ளவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் உட்பட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஏற்ற ஓய்வூதிய திட்டம்" என்று அவர் கூறுகிறார். 18 முதல் 70 வயது வரை உள்ள எவரும் என்பிஎஸ்ஸில் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

NPS திட்டம் குறித்த கட்டுக்கதை 5: "NPS உத்தரவாதமான வருமானத்தை வழங்காது"

NPS உத்தரவாதமான வருமானத்தை வழங்காது என்பது மற்றொரு தவறான கருத்து. ஜோஸ் இது குறித்து தெளிவுபடுத்துகையில், "இது சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது முதலீட்டாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படை முதலீடுகளின் செயல்திறனைப் பொறுத்து வருமானம் இருக்கும். இதில் பங்கு, கார்ப்பரேட் பத்திரங்கள் மற்றும் அரசாங்கப் பத்திரங்கள் ஆகியவை அடங்கும், எனவே வருமானம் காலப்போக்கில் மாறுபடும். இருப்பினும் நீண்ட காலத்திற்கு, என்பிஎஸ் திட்டங்கள் போட்டித்தன்மை கொண்ட வருமானத்தை வழங்கியுள்ளன."

NPS திட்டம் குறித்த கட்டுக்கதை 6: "ஓய்வு பெறும் வரை உங்கள் பணத்தை எடுக்க முடியாது"

NPS ஓய்வூதிய சேமிப்புக்காக வடிவமைக்கப்பட்டாலும், ஓய்வுக்கு முன் பகுதியளவு திரும்பப் பெறுவதற்கான வசதிகள் இருப்பதாக அவர் கூறுகிறார். கல்வி, வீடு வாங்குதல் அல்லது மருத்துவ அவசரநிலை போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பகுதியளவு திரும்பப் பெறலாம் என்று அவர் தெளிவு படுத்தினார்.

மேலும் படிக்க | அடிச்சது ஜாக்பாட்! ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 9.11% வரை வட்டி, எந்த வங்கி கொடுக்கிறது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News