8th Pay Commission அட்டகாசமான அப்டேட்: 50% டிஏ..அதைத் தொடர்ந்து புதிய ஊதியக்குழு!!

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் இந்த அகவிலைப்படி உயர்வை தவிர மற்றொரு நல்ல செய்திக்காகவும் காத்திருக்கிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 11, 2023, 12:24 PM IST
  • ஏழாவது ஊதியக் குழு 2013 இல் தொடங்கியது.
  • மத்திய அரசு 2024 ஜனவரியில் புதிய ஊதியக் குழுவை பற்றிய அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
  • அரசின் நிலைப்பாடு என்ன?
8th Pay Commission அட்டகாசமான அப்டேட்: 50% டிஏ..அதைத் தொடர்ந்து புதிய ஊதியக்குழு!! title=

8th Pay Commission, Latest Update: மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் உயர்வுக்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது. அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முன்மொழிவு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றில் அதிகரிப்பிற்கான அறிவிப்பு இந்த மாதம் எப்போது வேண்டுமானால் வரக்கூடும். கடந்த ஆண்டு ஜூலை 2022- க்கான அகவிலைப்படி உயர்வை அரசு செப்டம்பர் 28-ம் தேதி அறிவித்தது. அப்போது அதில 4 சதவிகித உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆகையால் இந்த ஆண்டும் செப்டம்பர் முதலே ஊழியர்கள் இந்த அறிவிப்பிற்காக காத்திருக்கிறார்கள். 

மத்திய அரசு ஊழியர்கள் இந்த அகவிலைப்படி உயர்வை தவிர மற்றொரு நல்ல செய்திக்காகவும் காத்திருக்கிறார்கள். அடுத்த, அதாவது 8 ஆவது ஊதியக்குழு (8th Pay Commission) பற்றிய அறிவிப்புதான் அது. இந்த ஆண்டு முடிவில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திற்குள் இது நடக்கும் என்ற நம்பிக்கையில் ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். 

ஏழாவது ஊதியக் குழு 2013 இல் தொடங்கியது

2013 ஆம் ஆண்டு ஏழாவது ஊதியக்குழுவிற்கான (7th Pay Commission) திட்டம் முன்வைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 2016 முதல் அமலுக்கு வந்தன. அது அமலுக்கு வந்த பின், அதன் அடிப்படையில் ஊழியர்களின் அகவிலைப்படி, ஊதியம், பிற கொடுப்பனவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. தற்போது ஊழியர்கள் 42 சதவிகித அகவிலைப்படியை (Dearness Allowance) பெற்று வருகிறார்கள். ஜூலை 1ம் தேதி முதல், சுமார் ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியில் 4 சதவீத உயர்வு வழங்கப்படும் என நம்பிக்கை உள்ளது. சமீபத்தில் நடந்த தேசிய கவுன்சில் (ஜேசிஎம்) ஊழியர்கள் தரப்பு கூட்டத்திலும் இந்த பிரச்னை எழுப்பப்பட்டது. AIDEF (All India Defense Employees Federation) பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார், ஊழியர்களின் டிஏ 46 சதவீதமாக உயர்வதற்கான (DA Hike) சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்தார்.

ஊதியக்குழுக்களின் அமைப்பின் வகைகளின் படி பார்த்தால் அடுத்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2026 முதல் அமலுக்கு வர வேண்டும். எனவே அரசுக்கு இன்னும் போதுமான அவகாசம் உள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எட்டாவது ஊதியக் குழு அறிவிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, மத்திய அரசு 2024 ஜனவரியில் புதிய ஊதியக் குழுவை பற்றிய அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

அரசின் நிலைப்பாடு என்ன?

இதற்கிடையில், எட்டாவது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய பணியாளர்கள் (Central Government Employees) அமைப்பினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு மத்திய மோடி அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. எனினும் எட்டாவது ஊதியக் குழுவைத் திட்டமிடுவது தொடர்பான பார்முலாவைத் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | NPS முதலீடு... கட்டுக்கதைகளும் விளக்கங்களும்... நிபுணர் கூறுவது என்ன!

இந்த ஃபார்முலாவின் அடிப்படையில், வரும் காலங்களில் மத்திய ஊழியர்களின் சம்பளம் உயரும். எட்டாவது ஊதியக் குழு அமைப்பது குறித்த பெரிய அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வழங்கத் தயாராகி வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எட்டாவது ஊதியக் குழுவை விரைவில் அரசு அமல்படுத்தலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், எட்டாவது ஊதியக் குழு அமைப்பது தொடர்பாக அரசு இப்பொது பரிசீலிக்கவில்லை என்று நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் கூறியிருந்தார். எனினும், இனிவரும் காலங்களில் அரசு நிச்சயம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

ஃபிட்மெண்ட் ஃபாக்டர்

மத்திய அரசு 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்தினால், ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கும். மத்திய பணியாளர்கள் பெறும் சம்பளத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஊழியர்களின் கொடுப்பனவுகள் தவிர, அவர்களின் அடிப்படை சம்பளம் ஃபிட்மென்ட் காரணியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 44 சதவீதம் உயர்த்தப்படும்.

8வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டாலோ அல்லது ஃபிட்மென்ட் ஃபாக்டரின் (Fitment Factor) சதவீதத்தை அரசு உயர்த்தினாலோ மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் என்பதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்வோம். தற்போது, மத்திய பணியாளர்களுக்கு 2.57 சதவீத ஃபிட்மென்ட் பேக்டர் உள்ளது. இதன்படி மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 சதவீதமாக உயர்ந்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 44 சதவீதத்திற்கு மேல் அதாவது நேரடியாக ரூ.18,000 -இலிருந்து  ரூ.26,000 ஆக உயரும்.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க செய்ய வேண்டியவை... முழு விபரம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News