7வது ஊதியக் குழு, சமீபத்திய புதுப்பிப்பு: புதன்கிழமை, 4 அக்டோபர் 2023, அதாவது இன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசு கிடைக்கக்கூடும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மோடி அரசாங்கம் இன்று ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்படலாம். இதற்காக ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

7th Pay Commission: அகவிலைப்படியை அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்படலாம்


மத்திய அமைச்சரவை பொருளாதார விவகாரக் குழு கூட்டம் அக்டோபர் 4, அதாவது இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து மோடி அரசு முடிவெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை எந்த நேரத்திலும் தேர்தல் கமிஷன் அறிவிக்கக்கூடும். ஆகையால், அகவிலைப்படி குறித்த முடிவு இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். அதன் பிறகு இந்த முடிவை எடுப்பது அரசுக்கு கடினமாகிவிடும்.


அகவிலைப்படி அதிகரிப்பு எவ்வளவு இருக்கும்? 3 சதவிகிதமா அல்லது 4 சதவிகிதமா? 


ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வுக்காக மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் காத்திருக்கின்றனர். மத்திய அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்த்தும் என ஒரு சாரார் கூறி வருகின்றனர். எனினும், ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரையிலான ஏஐசிபிஐ தரவுகளின் படி பார்த்தால் அகவிலைப்படி அதிகரிப்பு 4 சதவிகிதம் இருக்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் கூறி வருகிறார்கள். டிஏ 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரிக்கும்.


மேலும் படிக்க | 8th Pay Commission 2024இல் வந்துவிடும்! முறையான அறிவிப்பு விரைவில்! பே மேட்ரிக்ஸ் இப்படி இருக்குமா?


ஊழியர்களின் தற்போதைய அகவிலைப்படி எவ்வளவு?


மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போது 42 சதவிகித அகவிலைப்படியை பெற்றி வருகிறார்கள். 38 சதவிகிதமாக இருந்த ஊழியர்களின் டிஏ (DA), ஜனவரி 2023 முதல் 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இதற்கான அறிவிப்பை மார்ச் 2023 -இல் அரசு வெளியிட்டது. 


அரியர் தொகையும் கிடைக்கும் (DA Arrears)


ஜூலை 1 2023 முதல் நடைமுறைக்கு வரும் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு இந்த மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நிலையில், அதிகரிக்கப்பட்ட டிஏ அக்டோபர் மாத சம்பளத்துடன் வரும். இது மட்டுமின்றி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி அதிகரிப்பு அரியர் தொகையும் (DA Arrears) ஊழியர்களுக்கு இந்த அக்டோபர் சம்பளத்துடன் சேர்ந்து கிடைக்கும். இதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் பம்பர் பண வரவு இருக்க வாய்ப்புள்ளது.


நவராத்திரிக்கு முன் ஊழியர்களுக்கு பரிசு (Navratri Gift For Employees)


நவராத்திரி பண்டிகை அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது தவிர, சட்டசபை தேர்தல் தேதியை, தேர்தல் கமிஷன் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவால் 47 லட்சம் ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | 7th Pay Commisison: ஊழியர்களுக்கு 3 குட் நியூஸ்... டிஏ ஹைக், டிஏ அரியர், ஊதிய உயர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ