மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: விரைவில் DA, HRA இரண்டிலும் பம்பர் ஏற்றம்
7th Pay Commission, HRA Hike: அகவிலைப்படி அதிகரிப்பை (DA Hike) தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் உயரவுள்ளது. இது பற்றிய முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission, HRA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி காத்துக்கொண்டிருக்கிறது. ஊழியர்களின் ஊதியத்தில் பல அதிகரிப்புகள் ஏற்பட உள்ளன. சமீபத்தில் ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது. எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. இந்த அறிவிப்பு மார்ச் மாதம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் மற்றொரு முக்கிய செய்தியும் வந்துள்ளது.
அகவிலைப்படி அதிகரிப்பை (DA Hike) தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் (House Rent Allowance) உயரவுள்ளது. இது பற்றிய முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
அகவிலைப்படியை தொடர்ந்து உயரும் வீட்டு வாடகை கொடுப்பனவு
அகவிலைப்படி (Dearness Allowance) நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்பது டிசம்பர் மாத ஏசிபிஐ குறியீடு (AICPI Index) மூலம் தெளிவாகியுள்ளது. மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை மார்ச் மாதம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்புதல் கிடைத்தவுடன் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரித்து ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50 சதவீதமாக (50% DA) உயரும். இது ஜனவரி 1, 2024 முதல் அவலுக்கு வரும்.
இதற்கு முன்னர் அகவிலைப்படி 25% -ஐ தாண்டியபோது HRA மூன்று சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அப்போது 24 சதவீதமாக இருந்த அதிகபட்ச வீட்டு வாடகை கொடுப்பநவு 27 சதவீதமாக உயர்ந்தது. ஏழாவது ஊதிய குழுவின் (7th Pay Commisson) கீழ், அடுத்த HRA உயர்வு அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் போது ஏற்பட வேண்டும். ஜனவரி முதல் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் என்பதால் ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. X பிரிவில் வரும் நகரங்களின் HRA, 30 சதவீதமாக அதிகரிக்கும். அதாவது இந்த நகரங்களில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களின் HRA 30 சதவீதமாக இருக்கும்.
HRA எப்போது அதிகரிக்கப்படுகின்றது
பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் படி அகவிலைப்படையின் அடிப்படையில் HRA அதிகரிக்கப்படுகின்றது. HRA -க்கு நகரங்கள், X,Y மற்றும் Z வகை நகரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி X பிரிவு நகரங்களில் உள்ள ஊழியர்களுக்கு 27%, Y பிரிவுக்கு 18% மற்றும் Z பிரிவுக்கு 9% என HRA வழங்கப்படுகிறது. இந்த விகிதங்கள் 2021 ஜூலை 1 முதல் அமலில் உள்ளது. எனினும் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு அரசாங்க குறிப்பாணையின் படி அகவிலைப்படி அதிகரிப்புக்கு ஏற்றவாறு HRA உயர்த்தப்பட வேண்டும். 2021 ஆம் ஆண்டில் அகவிலைப்படி 25% எட்டிய போது ஹெச்ஆர்ஏ உயர்த்தப்பட்டது. தற்போது அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் போது HRA மீண்டும் அதிகரிக்கப்படும்.
HRA கணக்கிடப்படும் சூத்திரம் என்ன?
தற்போதுள்ள நிலவரப்படி ஊழியர்கள் (Central Government Employees) வசிக்கும் நகரத்திற்கு ஏற்ப HRA வழங்கப்படுகிறது. எந்த வகை நகரத்திற்கு எவ்வளவு ஹெச் ஆர் ஏ வழங்கப்படுகிறது என்பதை இங்கே காணலாம்.
X பிரிவு நகரங்கள்
டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, மும்பை, புனே, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் X பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 27 சதவீதம் HRA வழங்கப்படுகின்றது.
Y பிரிவு நகரங்கள்
பாட்னா, லக்னோ, விசாகப்பட்டினம், குண்டூர், விஜயவாடா, குவஹாத்தி, சண்டிகர், ராய்ப்பூர், ராஜ்கோட், ஜாம்நகர், வதோதரா, சூரத், ஃபரிதாபாத், காசியாபாத், குர்கான், நொய்டா, ராஞ்சி, ஜம்மு, ஸ்ரீநகர், குவாலியர், இந்தூர், போபால், ஜபல்பூர், உஜ்ஜாயின் அவுரங்காபாத், நாக்பூர், சாங்லி, சோலாப்பூர், நாசிக், நாந்தேட், பிவாடி, அமராவதி, கட்டாக், புவனேஸ்வர், ரூர்கேலா, அமிர்தசரஸ், ஜலந்தர், லூதியானா, பிகானர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, அஜ்மீர், மொராதாபாத், மீரட், பரேலி, அலிகார், ஆக்ரா, அலிகார், கான்பூர், அலகாபாத், கோரக்பூர், ஃபிரோசாபாத், ஜான்சி, வாரணாசி, சஹாரன்பூர் போன்ற நகரங்கள் Y பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 18 சதவீதம் HRA வழங்கப்படுகின்றது.
Y பிரிவு நகரங்கள்
X மற்றும் Y வகை நகரங்களைத் தவிர, மற்ற அனைத்து நகரங்களும் Z பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 9 சதவீதம் HRA வழங்கப்படுகின்றது.
ஊழியர்களின் HRA எப்படி அதிகரிக்கும்?
வீட்டு வாடகை கொடுப்பனவில் அடுத்த திருத்தம் மார்ச் 2024 இல் செய்யப்படும். அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டிய பிறாகு, எஹ்ஆர்ஏ -வின் அதிகபட்ச விகிதம் தற்போதுள்ள 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கும். X பிரிவு ஊழியர்களுக்கு HRA 3% அதிகரிக்கும். Y பிரிவு ஊழியர்களுக்கு HRA 2% அதிகரிக்கப்பட்டு தற்போதுள்ள 18% -இல் இருந்து 20% ஆக உயரும் என்றும் Z பிரிவு ஊழியர்களுக்கு 1% அதிகரிக்கப்பட்டு 9% -இல் இருந்து 10% ஆக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க | இந்தியாவில் அதிக வருவாய் தரும் தொழில்கள்-இதை செய்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ