7th Pay commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட், டிஏ உடன் இதுவும் அதிகரிக்கும்

7th Pay Commission: அரசாங்கம் இன்னும் சில நாட்களில் அகவிலைப்படி மற்றும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என இரண்டிலும் அதிகரிப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 11, 2024, 08:32 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு குட் நியூஸ்.
  • ஏஐசிபிஐ குறியீடு காட்டும் அகவிலைப்படி அதிகரிப்பு எவ்வளவு?
  • ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கும்.
7th Pay commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட், டிஏ உடன் இதுவும் அதிகரிக்கும்

7th Pay Commission, DA Hike Latest Update: கடந்த சில மாதங்களாகவே  மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை பொறுத்தவரை பல நல்ல செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. தொடர்ந்து அவர்களது அகவிலைப்படி 4% ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. தற்போது மீண்டும் ஊழியர்களுக்கு இரு மிக நல்ல செய்திகள் கிடைகக்வுள்ளன. இதம் மூலம் அவர்களது நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அந்த இரண்டு குட் நியூஸ் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Add Zee News as a Preferred Source

அகவிலைப்படி மற்றும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர்

அரசாங்கம் இன்னும் சில நாட்களில் அகவிலைப்படி மற்றும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என இரண்டிலும் அதிகரிப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பிறகு ஊழியர்களின் மாத சம்பளத்தில் பெரிய அளவிலான ஏற்றம் இருக்கும். இது மட்டுமின்றி இதன் காரணமாக ஊழியர்களின் பிற கொடுப்பனவுகளிலும் ஏற்றம் ஏற்படும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை. எனினும், இது விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஏஐசிபிஐ குறியீடு காட்டும் அகவிலைப்படி அதிகரிப்பு எவ்வளவு

ஜனவரி 2024 முதல் அகவிலைப்படியில் 4 சதவிகித ஏற்றம் இருக்கும் என நம்பப்படுகின்றது. இது குறித்து அரசாங்கம் இன்னும் எதையும் தெரிவிக்கவில்லை என்றாலும், சமீபத்தில் வெளியான டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் மூலம் இது தெளிவாகிறது. 

தொழில்துறை தொழிலாளர்களுக்கான பணவீக்கத்தை கணக்கிடும் CPI-IW எண்ணிக்கையின் டிசம்பர் மாத தரவு 138.8க்கு வந்துள்ளது. இது முந்தைய மாத எண்ணிக்கையான 139.1ஐ விடக் குறைவாகும். உணவு மற்றும் பானங்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம் குறியீட்டில் இந்த குறைவுக்கு முதன்மையான உந்துதலாக இருந்துள்ளது. டிசம்பர் மாத குறியீடு வந்தவுடன் ஜனவரி 2024 முதலான டிஏ ஹைக் (DA Hike) அளவை  கணக்கிடுவதற்குத் தேவையான அனைத்து குறியீடுகளும் கிடைத்தன. அதன் அடிப்படையில் இம்முறையும் அகவிலைப்படி (Dearmess Allowance) 4 சதவிகிதம் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | இந்தியாவில் அதிக வருவாய் தரும் தொழில்கள்-இதை செய்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

தற்போது மத்திய அரசு ஊழியர்களும் (Central Government Employees) ஓய்வூதியதாரர்களும் (Pensioners) 46% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டால் மொத்த அகவிலைப்படி 50% ஆக உயரும்.

ஏழாவது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் படி, அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படியை அதிகரிக்கிறது. இதன் விகிதங்கள் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இப்போது அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால், அதன் விகிதங்கள் ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும்.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கும்

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor) உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். இதை இப்போது அரசு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. இதன்படி குறைந்த பட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் உயர்வு ஏற்பட்டால், அது அடிப்படை சம்பளத்திலும் அதிகரிப்பை ஏற்படுத்தும். ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 2.57 -இலிருந்து 3.0 ஆக உயர்த்த வேண்டும் என்பது ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.0 ஆனால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து 21,000 ரூபாயாக உயரும். இது ஊழியர்களின் மொத்த ஊதியத்திதில் மிகப்பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தும். 

மேலும் படிக்க | செயலிழந்த NPS கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News