7வது ஊதியக்கமிஷன் டிஏ புதுப்பிப்பு: கடந்த இரண்டு மாதங்களாக, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி பற்றி பல விதமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது அகவிலைப்படிக்கான காத்திருப்பு முடிந்துவிட்டது. அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு-தொழில்துறை தொழிலாளர்களின் தரவுகள் வெளிவந்த பிறகு, அகவிலைப்படியில் நல்ல உயர்வு இருக்கும் என்பது உறுதியானது. ஜூன் மாதத்தில் குறியீடு 0.2 புள்ளிகள் அதிகரித்தது. இப்போது அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி அடுத்த மாதம் வழங்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது எவ்வாறு முடிவு செய்யப்படுகிறது


ஏஐசிபிஐ-ஐடபிள்யு-இன் முதல் பாதியின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. இதில் குறியீடு 0.2 புள்ளிகள் அதிகரித்து 129.2 ஆக இருந்தது. ஊழியர்களின் அகவிலைப்படியை தீர்மானிக்க இந்த குறியீட்டின் தரவை அரசாங்கம் பயன்படுத்துகிறது. குறியீட்டின் படி அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதன் பலனைப் பெறுவார்கள். 


அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது


மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அரசு அறிவித்துள்ளது. டிஏ-இன் உயர்வு ஏஐசிபிஐ-இன் தரவைப் பொறுத்தது. ஏஐசிபிஐ-ஐடபிள்யு- இன் முதல் பாதியின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏஐசிபிஐ குறியீட்டின் படி, இப்போது புதிய எண்ணிக்கை 0.2 அதிகரித்து 129.2 ஆக உள்ளது. 


மேலும் படிக்க |மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் காத்திருக்கும் டிரிபிள் ட்ரீட்! 


38 சதவீத டிஏ பணம் எப்போது கணக்கில் வரும்?


அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்ட பிறகு, மத்திய ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னதாக, ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதமாக இருந்தது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி செப்டம்பர் 2022 சம்பளத்தில் வழங்கப்படும். உயர்த்தப்பட்ட டிஏ ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாத நிலுவைத் தொகையும் ஊழியர்களின் கணக்கில் வரும். ஆகையால், வரும் பண்டிகை காலத்தில் ஊழியர்களின் கணக்கில் பெரும் தொகை வரும்.


அகவிலைப்படி 4 சதவீதம் உயர்ந்த பிறகு, மத்திய ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. புதிய அகவிலைப்படி செப்டம்பர் 2022 சம்பளத்தில் வழங்கப்படும். இதில் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாத நிலுவைத் தொகையும் வரும். புதிய அகவிலைப்படியானது ஜூலை 1, 2022 முதல் பொருந்தும். மொத்த தொகையையும் நவராத்திரியின் போது அரசு ஊழியர்களுக்கு கொடுக்கும். இதனால், ஊழியர்களின் கணக்கில் பெரும் தொகை வரும். 


ஏஐசிபிஐ ஜூன் மாதத்தில் 129.2-ஐ எட்டியது


நம்மிடம் முதல் பாதியின் புள்ளிவிவரங்கள் உள்ளன. ஜூன் மாதத் தரவை இணைத்து, இந்தக் குறியீடு இப்போது 129.2ஐ எட்டியுள்ளது. மே மாதத்தில், ஏஐசிபிஐ குறியீடு 129 புள்ளிகளாக இருந்தது.


அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.21,622/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.19,346/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 21,622-19,346 = ரூ 2,276/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 2,276X12 = ரூ 27,312


குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.6840/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 6840-6120 = ரூ.720/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 720 X12 = ரூ 8,640


மேலும் படிக்க | மகிழ்ச்சி செய்தி! ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு இந்தத் தேதியில் இருந்து அமலுக்கு வரும்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ