சமீப காலமாகவே லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் அகவிலைப்படி, சம்பள உயர்வு, நிலுவை தொகை என்கிற செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது. ஊழியர்களின் நீண்ட நாளைய காத்திருப்புக்கு பிறகு தற்போது வருகின்ற செப்டம்பர் மாதத்தில் அவர்களுக்கு மிக சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு டிரிபிள் ட்ரீட் கிடைக்கப்போகிறது என்று கூறப்படுகிறது, நவராத்திரி சமயத்தில் ஊழியர்களுக்கு 4 சதவீத டிஏ உயர்வை அரசு அறிவிக்கக்கூடும், இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ 38 சதவீதமாக உயரும் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாது இன்னும் இரண்டு மகிழ்ச்சியான விஷயங்கள் உள்ளது, அதாவது இதுவரை இருந்த டிஏ நிலுவை தொகைகள் மற்றும் பிஎஃப் கணக்குகளுக்கான வட்டிப் பணம் வழங்குவது என மூன்று விதமான நன்மைகள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களின் வங்கி கணக்கு இந்த டிரிபிள் போனான் மூலம் நிரம்பி வழியப்போகிறது. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இது அவர்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சியை அளிக்கும். இந்த ஆண்டு நவராத்திரியையொட்டி நடக்கவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது டிஏ உயர்வு அறிவிக்கப்படலாம், மேலும் இந்த ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பரிலோ பிஎஃப் கணக்குகளுக்கான வட்டி குறித்த அறிவிப்பும் வெளியாகலாம். மேலும் இந்த கொரோனா பெருந்தொற்றில் பல்வேறு துறைகளில் ஏற்பட்ட முடக்கத்தான் காரணமாக அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய 18 மாத நிலுவை தொகையும் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் பலரும் நீண்ட நாட்களாகவே அவர்களின் 18 மாத நிலுவை தொகையினை கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர், அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக அரசு நிலுவை தொகையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎஃப்ஓ) 7 கோடிக்கும் அதிகமான கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த மாத இறுதிக்குள் வட்டித் தொகையைப் பெறுவார்கள், அதில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த முறை 8.1 சதவீத வட்டி விகிதத்தின்படி பிஎஃப் தொகையை பெறுவார்கள் என்று சில செய்திகள் தெரிவிக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ