7th Pay Commission: ஊழியர்களுக்கு ரூ. 50,000-லிருந்து ரூ.95,000 வரை சம்பளம் உயர வாய்ப்பு!

ஃபிட்மென்ட் பேக்டர் லெவல் மேட்ரிக்ஸ் 1-லிருந்து மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000-லிருந்து ஆரம்பமாகும்.  

Written by - RK Spark | Last Updated : Aug 22, 2022, 10:29 AM IST
  • கடந்த 2017-ம் ஆண்டு அடிப்படை ஊதியம் மாதம் ரூ.18000 ஆக உயர்த்தப்பட்டது.
  • ஃபிட்மென்ட் பேக்டர் லெவல் மேட்ரிக்ஸ் 1-லிருந்து குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000-லிருந்து ஆரம்பமாகும்.
  • ஃபிட்மென்ட் பேக்டர் மூலமாக மத்திய ஊழியர்களின் சம்பளம் இரண்டரை மடங்குக்கு மேல் உயர்கிறது.
7th Pay Commission: ஊழியர்களுக்கு ரூ. 50,000-லிருந்து ரூ.95,000 வரை சம்பளம் உயர வாய்ப்பு! title=

மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஐம்பத்திரெண்டு லட்ச ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் பேக்டர் குறித்த சில செய்திகளை வெளியிட்டுள்ளது, அதன்படி இந்த மாதத்தில் ஃபிட்மென்ட் பேக்டர் பற்றி பெரிய முடிவை அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த 2017-ம் ஆண்டு தொடக்க நிலை அடிப்படை ஊதியம் மாதம் ரூ.7000லிருந்து ரூ.18000 ஆக உயர்த்தப்பட்டது.  ஃபிட்மென்ட் காரணி 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது, இதுகுறித்த அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதன்மூலம் அடிப்படைச் சம்பளம் ரூ.8000 ஆக உயர்ந்து, ரூ.18000-லிருந்து ரூ.26000 ஆக உயரும்.  

மேலும் படிக்க | EPFO வட்டி விகிதம் உயர உள்ளதா? மத்திய அமைச்சர் கொடுத்த மிகப்பெரிய தகவல்

ஃபிட்மென்ட் பேக்டர் லெவல் மேட்ரிக்ஸ் 1-லிருந்து மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000-லிருந்து ஆரம்பமாகும்.  7வது ஊதியக் குழுவில், மத்திய ஊழியர்களின் சம்பளம் ஃபிட்மென்ட் காரணியால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது மத்திய ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் பேக்டர் 2.57 மடங்கு எனில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18000 மற்றும் அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56900.  எடுத்துக்காட்டாக ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 எனில் அலோவன்ஸ் தவிர்த்து அவருடைய சம்பளம்  ரூ 18,000 X 2.57 = ரூ 46,260 லாபம் கிடைக்கும்.  

ஃபிட்மென்ட் பேக்டர் மூலமாக மத்திய ஊழியர்களின் சம்பளம் இரண்டரை மடங்குக்கு மேல் உயர்கிறது. ஃபிட்மென்ட் பேக்டர் அடிப்படையில், திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் பழைய அடிப்படை ஊதியத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது.  அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் வகையில் 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்தப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | வீட்டுக்கடன் வாங்கணுமா? மிகக்குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News