7th Pay Commission: டிஏ ஹைக், முக்கிய அப்டேட்....மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் குட் நியூஸ்
7th Pay Commission, DA Hike Update: ஜூலை 2024 இல் டிஏ உயர்வு 4 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாத ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படி 50.84 சதவீதமாக உள்ளது.
7th Pay Commission, DA Hike Update: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய பணிகளில் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அடுத்த அகவிலைப்படி உயர்வு பற்றிய சில முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அதேபோல் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) அகவிலை நிவாரணம் (Dearness Relief) அளிக்கப்படுகின்றது. ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இது திருத்தப்படுகின்றது.
நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI-IW) தரவு
அகவிலைப்படியில் ஏற்படும் திருத்தம் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI-IW) தரவைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. CPI-IW முக்கிய நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கிறது.
அகவிலைப்படி மீதான தாக்கம் என்ன?
ஒவ்வொரு மாதத்தின் கடைசி பணி நாளிலும், முந்தைய மாதத்தின் CPI-IW தரவு வெளியிடப்படுகின்றது. எனினும் முன்னெப்போதும் இல்லாத வகையில், பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் 2024க்கான CPI-IW தரவை தொழிலாளர் பணியகம் இன்னும் வெளியிடவில்லை. இதன் காரணமாக ஜூலை 2024ல் மத்திய ஊழியர்கள் பெறக்கூடிய அகவிலைப்படி (Dearness Allowance) தொகையை மதிப்பிடுவது கடினமாகி விட்டது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான தரவுகள் தொழிலாளர் பணியகத்திடம் இல்லாததே இந்த தாமதத்திற்கான காரணம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அகவிலைப்படி குறித்த பல ஊகங்கள்
மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி 2024 ஜூலையில் பூஜ்ஜியமாகிவிடும் என்று சில வதந்திகள் உள்ளன. ஆனால், இந்த வதந்தி தவறு என அரசு நிரூபித்துள்ளது. தற்போதைய விதிகளின்படி, அகவிலைப்படி 50 சதவீதத்திற்கு மேல் கணக்கிடப்படுகிறது. 7வது ஊதிஉஅக்குழுவின் பரிதுரைகளின் கீழ், அகவிலைப்படி 50% -ஐ தாண்டினால்தான் அதை பூஜ்ஜியம் ஆக்குவது பற்றி யோசிக்க வேண்டும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அகவிலைப்படி சரியாக 50% -இல் உள்ளது. ஆகையால், அடுத்த திருத்தத்தில் அகவிலைப்படி பூஜ்ஜியம் (0 Percent DA) ஆக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
ஜூலை 2024 இல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
ஜூலை 2024 இல் டிஏ உயர்வு (DA Hike) 4 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாத ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படி 50.84 சதவீதமாக உள்ளது. எனினும், பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான தரவுகளும் வந்தவுடன் அகவிலைப்படியின் மொத்த ஏற்றம் 54 சதவீதமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. தொழிலாளர் பணியகம் தரவுகளை வெளியிடாததால் கணக்கீடுகளில் இன்னும் சிரமம் உள்ளது. ஆனால், அகவிலைப்படி விரைவில் வழங்கப்படும் என அரசு உறுதி செய்துள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.
மேலும் படிக்க | 8th Pay Commission முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா அடுத்த ஊதியக்கமிஷன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ