8th Pay Commission முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா அடுத்த ஊதியக்கமிஷன்?

8th Pay Commission: சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பள கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ள 8வது ஊதியக்குழு பற்றிய செய்தி விரவில் வரும் என நம்பப்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 10, 2024, 04:47 PM IST
  • 8th Pay Commission: எதிர்பார்க்கப்படும் அமலாக்க தேதி என்ன?
  • ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
  • 7வது மத்திய ஊதியக் குழு எப்போது அமலுக்கு வந்தது?
8th Pay Commission முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா அடுத்த ஊதியக்கமிஷன்? title=

8th Pay Commission: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான எண்டிஏ அரசு மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இனி தொடர்ச்சியாக அரசு சார்பில் பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களும் 8வது ஊதியக்குழு உட்பட பல முக்கிய அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) சம்பள கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ள 8வது ஊதியக்குழு பற்றிய செய்தி விரவில் வரும் என நம்பப்படுகின்றது. 

ஜூலை 2023 இல், 8வது மத்திய ஊதியக் குழுவை உருவாக்குவதற்கான முன்மொழிவு எதுவும் இல்லை என்று அரசாங்கம் கூறியிருந்தது. முன்னதாக, 8வது மத்திய ஊதியக் குழுவின் புதுப்பிப்பு குறித்து மத்திய அரசு ஊழியர்களிடையே (Central Government Employees) தொடர்ந்து பல யூகங்கள் இருந்த நிலையில், ஜனதா தள கட்சியின் ராம்நாத் தாக்கூர், ஜூலை 25, 2023 அன்று மாநிலங்களவை அமர்வின் போது இது குறித்த கேள்விகளை எழுப்பினார். விசாரணைகளின் கவனம் மத்திய ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான விஷயங்களில் இருந்தது. 

அந்த கேள்விக்கு பதிலளித்த அப்போதைய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 8வது ஊதியக் குழு அமைப்பது குறித்து பெரிய அப்டேட் ஒன்றை அளித்தார். 2024 ஜனவரியில் இருந்து அகவிலைப்படி (Dearness Allownce) மற்றும் அகவிலை நிவாரணத்தின் (Dearness Relief) விகிதம் 50 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதால், எட்டாவது மத்திய ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளதா இல்லையா என்ற கேள்வி ராஜ்யசபாவில் எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த சவுத்ரி, அத்தகைய திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று அப்போது கூறினார். எனினும், அரசின் அந்த நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | SIP, PPF, EPF, VPF.... வேகமாக பணத்தை இரட்டிப்பாக்கும் அசத்தல் திட்டங்கள்

8வது மத்திய ஊதியக் குழு உருவாக்கத்திற்கான ஆர்வம் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வலுப்பெற்றிருக்கிறது. தற்போது தேர்தலும் முடிந்து, புதிய அரசும் அமைந்துள்ள நிலையில், 8வது மத்திய ஊதியக் குழு அமைப்பது குறித்த பேச்சுகள் மீண்டும் வலுப்பெற்று வருகின்றன.

8th Pay Commission: எதிர்பார்க்கப்படும் அமலாக்க தேதி என்ன?

8வது ஊதியக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்தால், அதன் பரிந்துரைகளை சமர்ப்பிக்க குறைந்தபட்சம் ஓராண்டு அல்லது 18 மாதங்கள் தேவைப்படும். 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அது 2026ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

8வது சம்பள கமிஷன்: ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? 

பொதுவாக ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான ஊதியக் குழுவின் பரிந்துரையானது, ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அடிப்படையாகக் கொண்டிருக்கும். 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டால், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்காக உயரும் என நம்பப்படுகின்றது. 8வது ஊதியக் குழுவில் ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor) 3.68 மடங்காக உயர்ந்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 44.44 சதவீதம் அதிகரிக்கலாம். 7வது ஊதியக் குழுவின் கீழ், ஊழியர்கள் 2.57 (ஃபிட்மென்ட் பேக்டர்) அடிப்படையில் அடிப்படை சம்பளமாக (Basic Salary) ரூ.18 ஆயிரம் பெறுகின்றனர். இது 26 ஆயிரம் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கலாம்.

7th Central Pay Commission: 7வது மத்திய ஊதியக் குழு எப்போது அமலுக்கு வந்தது? 

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், 7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) அமலாக்க அறிவிப்பு ஜூலை 2016 இல் வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஊழியர்கள் ஆகஸ்ட் மாத ஊதியத்தில் இருந்து திருத்தப்பட்ட ஊதியத்தைப் பெற வழிவகை செய்யப்பட்டது.

குறைந்தபட்ச ஊதியம், ஃபிட்மென்ட் ஃபாக்டர், ஊதிய மெட்ரிக்குகள் மற்றும் ஊதியம் குறித்த பொதுவான பரிந்துரைகள் ஆகியவற்றில் உள்ளடக்கப்பட்ட பணியாளர்களின் விதிமுறைகள் தொடர்பான ஆணையத்தின் பரிந்துரைகளை அரசாங்கம் பரிசீலித்த பிறகு ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது. 

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

மேலும் படிக்க | சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கு புதிய தொழில்நுட்ப திட்டம் தயாராகிறது..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News