7th Pay Commission: அரசாங்கம் 7வது ஊதியக் குழுவின் கீழ் தனது ஊழியர்களுக்கான வீட்டு வாடகைக் கொடுப்பனவு (HRA) விதிகளை புதுப்பித்து இருக்கிறது.  இதுதவிர எந்த மாதிரியான ஊழியர்களுக்கு HRAக்கான உரிமை இல்லை என்பது பற்றியும் தெளிவாக கூறியுள்ளது.  HRA விதிகளின்படி, அரசு ஊழியர்கள் எந்த இடத்தில் வசிக்கிறார்கள் என்பதை பொருட்படுத்தாமல் பணியிடத்தின் குறிப்புடன் வீட்டு வாடகை அலவன்ஸ்கள் அனுமதிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

HRA க்கு தகுதி பெறாத ஊழியர்கள் யார்?


(i) மற்றொரு அரசாங்க ஊழியருக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க தங்குமிடத்தைப் பகிர்ந்து கொள்பவர்கள்.


(ii) மத்திய அரசு, மாநில அரசு, தன்னாட்சி பெற்ற பொது நிறுவனம் அல்லது நகராட்சி, துறைமுக அறக்கட்டளை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக் கழகம் போன்ற அரை-அரசு நிறுவனத்தால் அவரது குடும்பத்தினருக்கு ஒதுக்கப்பட்ட விடுதியில் வசிப்பவர்.


மேலும் படிக்க | சிறிய முதலீடு .... கை நிறைய லாபம் ! ஏழைகளுக்கான 4 வழிகள்


(iii) ஊழியர்களது வாழ்க்கை துணைக்கு நகராட்சி, துறைமுக அறக்கட்டளை போன்ற மத்திய அரசு/மாநில அரசு/ தன்னாட்சி பொது நிறுவனம்/ அரை-அரசு அமைப்பு ஆகியவற்றால் அதே நிலையத்தில் தங்கும் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தாலும், இருவரும் அந்த விடுதியில் தனித்தனியாக வசிப்பவராக இருந்தாலும் அலவன்ஸ்கள் கிடையாது.


மேலும் இந்த புதிய திருத்தத்தின்படி, அரசு ஊழியரைத் தவிர, அவருக்குச் சொந்தமான வீட்டில் வசிக்கும் அரசு ஊழியர்கள், மற்ற அரசு ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு தங்குமிடத்தைப் பகிர்ந்து கொண்டாலும், அவர்கள் வாடகை செலுத்த வேண்டும்.


HRA வகைகள்:


வீட்டு வாடகை அலவன்ஸ்கள் என்பது வாடகை வீடுகளில் வசிக்கும் ஊழியர்களுக்கான தங்குமிடம் தொடர்பான செலவுகளுக்கானது.  இது X, Y மற்றும் Z என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.


(i) 'X' என்பது 50 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கானது, 7வது மத்திய ஊதியக் குழு பரிந்துரைத்தபடி HRA 24 சதவீதம் வழங்கப்படுகிறது.


(ii) 'Y' என்பது 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை மக்கள்தொகை கொண்ட பகுதிகளுக்கானது, 7வது மத்திய ஊதியக் குழு பரிந்துரைத்தபடி HRA 16 சதவீதமாக வழங்கப்படுகிறது.


(iii)  'Z' என்பது 5 லட்சத்திற்கும் குறைவாக மக்கள்தொகை கொண்ட பகுதிகளுக்கானது, 7வது மத்திய ஊதியக் குழு பரிந்துரைத்தபடி HRA 8 சதவீதமாக வழங்கப்படுகிறது.


7வது ஊதியக் குழுவின்படி, HRA விகிதங்கள் X, Y மற்றும் Z ஆகிய நகரங்களுக்கு முறையே 27 சதவீதம், 18 சதவீதம், 9 சதவீதம் என உள்ளது.  ஊழியர்களுக்கான அகவிலைப்படி 25 சதவீதம் மற்றும் அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டும்போதும் 30 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 10 சதவீதம் என திருத்தப்பட்டது.  இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவையில் உள்ளது, இதனை ஊழியர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.  ஊழியர்களின் எதிர்பார்ப்பின் படி, மத்திய அரசு விரைவில் ஊழியர்களின் கணக்கில் 18 மாத நிலுவை தொகையை வரவு வைத்துவிடும் என்று தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது.


மேலும் படிக்க | Jackpot! 1000 கொடுத்தால் 3.5 லட்சம்! பணக்காரர் ஆக அரிய வாய்ப்பு! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ