ஏழாவது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. அகவிலைப்படியில் ஏற்படும் அதிகரிப்பு ஏஐசிபிஐ குறியீட்டைப் பொறுத்தது. உலகின் பல நாடுகள் பணவீக்க பிரச்சனையை சந்தித்து வருகின்றன. நாட்டின் பணவீக்கம் குறித்து தெரிவித்த ரிசர்வ் வங்கி, வரும் காலங்களில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளது. இந்த முறை நவம்பரில் ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை அறிவிப்பை வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவே வெளியிடவுள்ளது. எனினும், பணவீக்கத்தின் நிலை இப்படி இருந்தாலும், இனி வரும் காலத்தில் அகவிலைப்படியில் நல்ல அதிகரிப்பு இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
அகவிலைப்படி மீண்டும் 4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது
செப்டம்பர் கடைசி வாரத்தில், அகவிலைப்படியில் 4 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்பட்டது. அகவிலைப்படியில் அடுத்த திருத்தம் ஜனவரி 2023 முதல் இருக்கும். பணவீக்கத்தின் சூழ்நிலை காரணமாக, வரும் நாட்களில் அகவிலைப்படி மீண்டும் 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி 42 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி 2016 இல் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது
அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியவுடன், அது பூஜ்ஜியமாக்கப்படும். 2016ல் 7வது ஊதியக்குழு அமலுக்கு வந்தபோது அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்பட்டது. 50 சதவீதத்தின் படி, ஊழியர்களுக்கு கொடுப்பனவாக கொடுக்கப்பட்ட தொகை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும். உதாரணமாக, அடிப்படை சம்பளம் ரூ 18,000 ஆக உள்ள ஊழியர்களுக்கு, 50 சதவீத அகவிலைப்படியின் ரூ 9000 கிடைக்கும். ஆனால், அகவிலைப்படி 50 சதவீதம் ஆன பிறகு, இது அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்பட்டு, அகவிலைப்படி மீண்டும் பூஜ்ஜியமாக்கப்படும்.
இந்த பணி 2016 இல் செய்யப்பட்டது
ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி முழுவதையும் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்பது விதி என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இப்படி செய்கையில், நிதி நிலைமை இதற்கு இடையூறாக வந்துவிடுகிறது. இருப்பினும், இந்த செயல்முறை 2016 இல் செய்யப்பட்டது. 2006ல், 6 ஆவது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட போது, ஐந்தாவது ஊதியக்குழுவில் டிசம்பர் வரை 187 சதவீத அகவிலைப்படி கிடைத்து வந்தது. அகவிலைப்படி முழுவதும் அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டது.
ஹெச்ஆர்ஏவும் 3 சதவீதம் அதிகரிக்கும்
வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) செய்யப்படும் அடுத்த திருத்தம் 3 சதவீதமாக இருக்கும். தற்போதுள்ள அதிகபட்ச விகிதமான 27 சதவீதத்தில் இருந்து ஹெச்ஆர்ஏ 30 சதவீதமாக உயர்த்தப்படும். ஆனால், அகவிலைப்படி 50% ஐ தாண்டும்போதுதான் இது சாத்தியமாகும். மெமோராண்டத்தின் படி, அகவிலைப்படி 50% ஐத் தாண்டினால், ஹெச்ஆர்ஏ 30%, 20% மற்றும் 10% ஆக மாறும். X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களின்படி வீட்டு வாடகை கொடுப்பனவு (ஹெச்ஆர்ஏ) வகை உள்ளது.
X பிரிவில் வரும் மத்திய ஊழியர்களுக்கு 27% ஹெச்ஆர்ஏ கிடைக்கிறது. அகவிலைப்படி 50% ஆனால், இது 30% ஆக உயரும். அதே சமயம், Y பிரிவினருக்கு, ஹெச்ஆர்ஏ 18 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக உயரும். Z பிரிவினருக்கு இது 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: தீபாவளியில் டிஏ ஹைக்குடன் ஊழியர்களுக்கு மற்றொரி குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ