கொரோனா தொற்று காரணமாக அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் மீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் (Central Government) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு ஒரு மிகப் பெரிய நல்ல செய்தியை அளித்தது. 11% அகவிலைப்படி (Dearness Allowance) உயர்த்தப்பட்டு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவிகிதமாக அதிகரித்தது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக அரசு ஊழியருக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 


ALSO READ: 7th Pay Commission DA Hike: ரூ.95,000 வரை உயரும் சம்பளம், கணக்கீடு இதோ!!


மத்திய அரசு கூறியது என்ன?
ஜூலை 28 அன்று நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய அரசு (Central Government) இதுபோன்ற எந்த விஷயத்தைப் பற்றியும் பரிசீலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.


7 வது மத்திய ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதிய கட்டமைப்பில் ஊதியத்தை நிர்ணயிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே அனைத்து வகை ஊழியர்களுக்கும் 2.57-இன் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் செயல்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.


மத்திய அரசு ஊழியர்களின் DA உடன் HRA-வும் அதிகரித்தது
இது மட்டுமல்லாமல், அகவிலைப்படி அதிகரிப்போடு, மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) அதிகரிக்கவும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. விதிகளின்படி, அகவிலைப்படி 25% ஐ தாண்டியுள்ளதால், HRA அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு வீட்டு வாடகை கொடுப்பனவையும் 27% ஆக உயர்த்தியுள்ளது.


நகரத்தின் அடிப்படையில் HRA மாறுபடும்
அரசாங்க உத்தரவின்படி, எச்.ஆர்.ஏ நகரங்களின்படி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது - X, Y மற்றும் Z. திருத்தத்திற்குப் பிறகு, X வகை நகரங்களுக்கான எச்ஆர்ஏ அடிப்படை ஊதியத்தில் 27% ஆக இருக்கும். அதேபோல் Y வகை நகரங்களுக்கான எச்ஆர்ஏ அடிப்படை ஊதியத்தில் 18% ஆகவும், Z வகை நகரங்களுக்கு இது அடிப்படை ஊதியத்தில் 9% ஆகவும் இருக்கும்.


ALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படி 28%-லிருந்து 31 % ஆக உயரும்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR