7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் செப்டம்பர் முதல் 28% அகவிலைப்படியைப் பெறத் தொடங்குவார்கள். ஆனால் இப்போது ஜூன் மாத அகவிலைப்படியையும் அரசாங்கம் விரைவில் சம்பளத்துடன் சேர்த்து கொடுக்கும் என்ற செய்தியும் வந்துகொண்டிருக்கின்றது. அப்படி நடந்தால், மொத்த அகவிலைப்படி 28% க்கு பதிலாக 31% ஆக உயரும்.
ஜூன் மாதத்திற்கான 3% டிஏ இன்னும் அதிகரிக்கவில்லை
ஜூன் 2021 க்கான அகவிலைப்படி (Dearness Allowance) இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 2021 ஜனவரி முதல் மே வரையிலான AICPI தரவுகளிலிருந்து 3% அகவிலைப்படி மேலும் அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. இது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்று ஜேசிஎம் செயலாளர் (பணியாளர்கள் பக்கம்) சிவ் கோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார். எனினும், எப்போது இது செலுத்தப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 3 சதவிகிதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டும். ஊழியர்களின் சம்பளம் மீண்டும் ஒரு முறை அதிகரிக்கும் என்பது உறுதி.
2020 ஜனவரியில், அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. பின்னர் ஜூன் 2020 இல், 3 சதவிகிதம் அதிகரித்தது. இதற்குப் பிறகு, ஜனவரி 2021 இல் இது 4 சதவிகிதம் அதிகரித்தது. அதாவது, இந்த மூன்று அதிகரிப்பால், அகவிலைப்படி மொத்தம் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இப்போது அது 28%ஐ எட்டியுள்ளது. இப்போது ஜூன் மாதத்தில் 3 சதவிகிதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவிகிதத்தை எட்டும் (17+4+3+4+3).
பே கிரேட் பொறுத்து சம்பளம் அதிகரிக்கும்
கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படியில் இருந்த முடக்கத்தை மத்திய அரசு நீக்கியுள்ளது, ஊழியர்களின் டிஏ 11% அதிகரித்துள்ளது, இப்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ மற்றும் டிஆர் 28% என்ற விகிதத்தில் வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் தரத்திற்கு ஏற்ப சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.
தற்போது சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? இதோ கணக்கீடு
7 வது ஊதியக்குழு (7th Pay Commission) மேட்ரிக்ஸ் படி, மத்திய அரசு ஊழியர்களின் நிலை -1 ன் சம்பள வரம்பு ரூ .18,000 முதல் ரூ .56900 வரை இருக்கும். அதாவது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ .18,000. செப்டம்பரில் மத்திய ஊழியரின் சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பதை குறைந்தபட்ச சம்பளம் கொண்டு கணக்கிடலாம்.
ALSO READ: 7th Pay Commission ஊழியர்களுக்கு எச்சரிக்கை: HBA விதிகளை மீறினால் உடனடி நடவடிக்கை
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
28% அகவிலைப்படி மீதான கணக்கீடு
ரூ .18,000 அடிப்படை சம்பளத்தின் மொத்த வருடாந்திர அகவிலைப்படி ரூ .60,480 ஆகும். ஆனால் சம்பள உயர்வைப் பற்றி பேசினால், ஆண்டு சம்பள உயர்வு ரூ .23760 ஆக இருக்கும்.
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .18,000
2. புதிய அகவிலைப்படி (28%) - ரூ .5040 / மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - ரூ .3060 / மாதம்
4. அதிகரித்த அகவிலைப்படி - 5040-3060 = ரூ .1980/மாதத்திற்கு
5. வருடாந்திர சம்பள உயர்வு - 1980X12 = ரூ 23760
31% அகவிலைப்படியில் கணக்கீடு
இப்போது ஜூன் மாதத்தில் அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்தால், மொத்த டிஏ 31 சதவீதமாக மாறும். இப்போது ரூ .18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த வருடாந்திர அகவிலைப்படி ரூ .66,960 ஆக இருக்கும். ஆனால் அதிகரிப்பைப் பற்றி பேசுகையில், ஆண்டு சம்பள அதிகரிப்பு ரூ. 30,240 ஆக இருக்கும்.
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .18,000
2. புதிய அகவிலைப்படி (31%) - ரூ .5580/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - ரூ .3060 / மாதம்
4. அதிகரித்த அகவிலைப்படி - 5580-3060 = ரூ .2520/மாதம்
5. வருடாந்திர சம்பள உயர்வு - 2520X12 = ரூ. 30,240
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தில் கணக்கீடு
லெவல் -1 இன் அதிகபட்ச அடிப்படை சம்பளத்தில் (ரூ .59900) இந்த கணக்கீட்டைப் பார்க்கலாம். 28% அகவிலைப்படியின் படி, ரூ. 56900 அடிப்படை சம்பளத்தின் மொத்த வருடாந்திர அகவிலைப்படி ரூ .191,184 ஆகும். ஆனால் அதிகரிப்பைப் பற்றி பேசினால், ஆண்டு சம்பள உயர்வு ரூ .75108 ஆக இருக்கும்.
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .56,900
2. புதிய அகவிலைப்படி (28%) - ரூ .15,932/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - ரூ .9673 / மாதம்
4. அதிகரித்த அகவிலைப்படி - 15932-9673 = ரூ.6259 /மாதம்
5. வருடாந்திர சம்பள உயர்வு - 6259X12= ரூ.75108
31% DA இல் கணக்கீடு
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .56,900
2. புதிய அகவிலைப்படி (31%) - ரூ . 17639/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - ரூ .9673 / மாதம்
4. அதிகரித்த அகவிலைப்படி - 17639-9673 = ரூ.7966 /மாதம்
5. வருடாந்திர சம்பள உயர்வு - 7966X12= ரூ.95,592
31% அகவிலைப்படிப்படியின் படி, ரூ .56900 என்ற அடிப்படை சம்பளத்தில் மொத்த வருடாந்திர அகவிலைப்படி ரூ .211,668 ஆகும். ஆனால் அதிகரிப்பைப் பற்றி பேசுகையில், ஆண்டு சம்பள உயர்வு ரூ .95,592 ஆக இருக்கும்.
இருப்பினும், எச்.ஆர்.ஏ உள்ளிட்ட பிற கொடுப்பனவுகளைச் சேர்த்த பின்னரே இறுதி சம்பளம் எவ்வளவு இருக்கும் என்ற கணக்கீடு வரும். இந்த கணக்கீடு அகவிலைப்படி அதிகரித்த பிறகு ஊழியர்களின் (Employees) சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்ற அளவீடு மட்டுமே ஆகும்.
ALSO READ:7th Pay Commission அதிர்ச்சி செய்தி: அடிப்படை சம்பள உயர்வு குறித்த எண்ணம் இல்லை - அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR