ஜூலை மாதம் வந்துவிட்டதால் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த எதிர்பார்ப்பு அரசு ஊழியர்களிடையே அதிகரித்து வருகிறது.  இந்த மாதம் உயர்த்தப்படும் அகவிலைப்படி உத்தரவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.40,000 வரை உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏஐசிபிஐ-ன் டேட்டாவின் படி, ஊழியர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான டிஏ உயர்வு கிடைக்கக்கூடும் என்கிற ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.  ஏற்கனவே 4 சதவிகிதம் அல்லது 5 சதவீதம் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தாலும், இப்போது உயர்த்தப்படும் எண்ணிக்கை 6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | EPFO Alert: இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள், எச்சரிக்கும் இபிஎஃப்ஒ 


அவ்வாறு 6 சதவீதம் உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயரக்கூடும்.  ஜூலை மாத இறுதியில், அதாவது ஜூலை 31 அன்று அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த செய்தி வந்தவுடன், ஊழியர்களின் வங்கி கணக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் நிரம்பிவிடும்.  இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏஐசிபிஐ அதிகரித்து வருகிறது.  மே மாதத்திற்கான எண்கள் கணிசமான அளவில் 1.3 புள்ளிகள் அதிகரித்து ஏஐசிபிஐ 129 ஆக உயர்ந்தது.  மேலும் ஜூன் மாதத்தில் எவ்வளவு உயர்வு எற்பட்டது என்பது பற்றி தெரியாவிட்டாலும் 6 சதவிகிதம் உயரும் என்று கூறப்படுகிறது.



6 சதவீத உயர்வு அளிக்கப்பட்டு மாதத்திற்கு சுமார் ரூ.3,414 உயர்த்தப்படுவதன் மூலம் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.56,900 கிடைக்கும்.  டிஏ உயர்வுடன் ஒப்பிடும்போது தற்போது 34 சதவீத மதிப்பீட்டில் மாதத்திற்கு ரூ.19,346 ​​அந்தத் தொகை ரூ.22,760 ஆக இருக்கும், மேலும் மொத்த ஆண்டு சம்பள உயர்வு ரூ.40,968 ஆக இருக்கும்.  அதேபோல, ரூ.18,000 அடிப்படைச் சம்பளத்திற்கான டிஏ உயர்வு மாதத்திற்கு ரூ.1,080 ஆக இருக்கும், டிஏ தொகை தற்போது ரூ.6,120லிருந்து ரூ.7,200ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  மேலும் டிஏ 6 சதவீதம் உயர்த்தப்பட்டால் ஆண்டுக்கு ரூ.12,960 ஆக இருக்கும்.


மேலும் படிக்க | EPFO pension scheme: இனி ஓய்வூதியம் இரட்டிப்பாக்கப்படும்! ரூ.15000 வரம்பு நீக்கப்படும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ