சமீபத்திய அனைத்திந்திய சிபிஐ-ஐடபுள்யூ டேட்டா ஜூலை மாதத்தில் டிஏ உயர்வுக்கான நம்பிக்கையை ஊழியர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.  அகவிலைப்படி (டிஏ) உயர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஒரு பிரகாசமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  ஏப்ரல் மாத ஏஐசிபி இன்டெக்ஸ், டிஏவை நிர்ணயிப்பதில் முக்கிய காரணியாக உள்ளது.  ஜூலை மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் நடக்கும் என்று கூறப்படுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Indian Railways: ஜூலை 1 முதல் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகைகள் கிடைக்குமா?


சில அறிவிப்புகளின்படி, ஜூலை மாதத்தில் டிஏ ஐந்து சதவிகிதம் உயர்த்தப்படலாம், இதன் பொருள் மொத்த டிஏ 39 சதவீதத்தை எட்டும் என்றும், 4 சதவீத அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்றும் தகவல்கள் வெளியானது.  இருப்பினும் ஏப்ரல் ஏஐசிபி இண்டெக்ஸ் சற்று அதிக சதவீத உயர்வைக் குறிக்கிறது. நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையை செலுத்துவது குறித்த அறிக்கைகள் மீண்டும் வெளியாகியுள்ளது.  புதிய அறிக்கைகளின்படி, ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத கால டிஏ நிலுவைத் தொகையை செலுத்துவது தொடர்பாக எழுந்த பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும். இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்கள் ஒரே தடவையில் ரூ. 2 லட்சம் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.  



டிஏ நிலுவைத் தொகையானது ஊழியர்களின் ஊதியம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து இருக்கும்.  2021-22 நிதியாண்டிற்கான உறுப்பினர்களின் கணக்குகளில் இபிஎஃப் கணக்குகளுக்கு 8.10% வருடாந்திர வட்டி விகிதத்தை வரவு வைக்க மத்திய அறங்காவலர் குழு பரிந்துரைத்துள்ளது.  வட்டி விகிதம் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து இபிஎஃப்ஓ ​​விரைவில் அதன் சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டி விகிதத்தை வரவு வைக்கத் தொடங்கும்.


மேலும் படிக்க | EPFO: இபிஎஃப்ஓ நாமினியை மாற்ற வேண்டுமா, இந்த வழியில் எளிதாக செய்யலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR