இபிஎஃப்ஓ நியமன செய்திகள்: வேலை செய்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இப்போது நீங்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) இணையதளமான epfindia.gov.in இல் லாக் இன் செய்து டிஜிட்டல் முறையில் இபிஎஃப், இபிஎஸ், பதிவுகளைச் சமர்ப்பிக்கலாம். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அனைத்து இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) நியமன வசதியை வழங்குகிறது. இதில் ஆன்லைன் முறையில் நீங்கள் எளிதாக இபிஎஃப், இபிஎஸ் நியமனத்தை சமர்ப்பிக்கலாம்.
தகவலின்படி, இப்போது ஒரு இபிஎஃப்ஓ சந்தாதாரர் தனது பிஎஃப் நாமினியை மாற்ற இபிஎஃப்ஓ இடம் விசாரிக்க வேண்டியதில்லை. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் புதிய பிஎஃப் நியமனத்தை தாக்கல் செய்து முந்தைய நாமினியை தாங்களாகவே மாற்றிக் கொள்ளலாம்.
இதற்கான முழு செயல்முறை இதோ:
- ஆன்லைன் பிஎஃப் பதிவு செய்ய, முதலில் நீங்கள் இபிஎஃப்ஓ இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான epfindia.gov.in இல் லாக் இன் செய்ய வேண்டும்.
- பின்னர் 'சர்விஸ்' என்பதில் சென்று 'ஊழியர்களுக்கான' என்ற டேபை கிளிக் செய்யவும்.
- 'சரிவிஸ்'-ல் 'மெம்பர் UAN/ஆன்லைன் சேவை (OCS/OTCP)' என்பதைச் சரிபார்க்கவும்
- உங்கள் UAN மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழையவும்
மேலும் படிக்க | ஆன்லைனில் PF கணக்கின் இருப்பை சரிபார்ப்பது எப்படி?
- 'மேனேஜ்' டேபின் 'இ-நாமினேஷன்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- குடும்ப அறிவிப்பைப் புதுப்பிக்க, 'எஸ்' என்பதைக் கிளிக் செய்யவும்
- 'ஏட் ஃபேமிலி டீடெயில்ஸ்' என்பதைக் கிளிக் செய்யவும்
- மொத்தப் பகுதியை அறிவிக்க, 'நாமினேஷன் விவரங்கள்' என்பதைக் கிளிக் செய்யவும்.
- அறிவிப்புக்குப் பிறகு 'சேவ் இபிஎஃப் நாமினேஷன்' என்பதைக் கிளிக் செய்யவும்.
- OTP ஐப் பெற 'E-sign' என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
- OTP ஐ உள்ளிடவும்
- இத்துடன், EPFO இல் உங்கள் இ-நாமினேஷன் பதிவு முடிந்தது.
சமீபத்தில், EPF அறங்காவலர் குழு கடந்த நிதியாண்டில் அதாவது 2021-22க்கான 8.1 சதவீத வட்டி விகிதங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விகிதங்கள் EPFO அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதற்குப் பிறகு, நிதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, அவை உங்கள் கணக்கிற்கு அனுப்பப்படும். கடந்த ஆண்டு, அதாவது 2020-21 நிதியாண்டில், அக்டோபர் மாதத்திலிருந்து வட்டி விகிதங்கள் வரத் தொடங்கின. இந்த ஆண்டு இதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | இபிஎஃப் கணக்கில் புதிய நாமினேஷனை தாக்கல் செய்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR