மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் ஜாக்பாட்: 5% டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு
7th Pay Commission: வரும் ஆண்டில் அகவிலைப்படி 5 சதவீதம் உயரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிகின்றன. இந்த முடிவு ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக அதிகரிக்கும்.
7வது சம்பள கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: வரும் மாதங்களில் மத்திய அரசு ஊழியர்கள் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அக்டோபரில் அகவிலைப்படி அதிகரிப்பு அறிவிக்கப்பட்டது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பிற்கான எதிர்பார்ப்புகள் தொடங்கியுள்ளன. அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பு தன்னுடன் இன்னும் பல மாற்றங்களை கொண்டு வரும். இந்த மாற்றங்களால் வாழ்க்கையில் பல விஷயங்கள் மேம்படும்.
வரும் ஆண்டில் அகவிலைப்படி 5 சதவீதம் உயரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிகின்றன. இந்த முடிவு ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக அதிகரிக்கும், இது அவர்களின் நன்மைகளை அதிகரிக்கும். புதிய தகவலின்படி, வரும் ஆண்டு மத்திய ஊழியர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைபப்டி
- பணியாளர்களுக்கு புத்தாண்டு சிறப்பாக அமையும்.
- ஜூலை 1 முதல் அகவிலைப்படி (Dearness Allowance) 46 சதவீதம் அதிகரித்தது.
- 2024 ஜனவரியில் அகவிலைப்படியில் மீண்டும் ஒரு அதிகரிப்பு இருக்கும்.
- சமீபத்திய ஏஐசிபிஐ தரவுகளின்படி நல்ல அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
- அகவிலைப்படியில் பெரிய அதிகரிப்பு இருக்கலாம்.
- இந்த நற்செய்திக்காக ஊழியர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தற்போதைய நிலை என்ன?
ஏஐசிபிஐ குறியீட்டின் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், அது தற்போது 137.5 புள்ளிகளில் உள்ளது. அகவிலைப்படியின் மதிப்பெண் 48.54% ஆக உள்ளது. அக்டோபரில் அகவிலைபப்டி எண் 49 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்கள் இன்னும் வரவுள்ளன. டிசம்பர் 2023 இல் ஏஐசிபிஐ குறியீட்டு எண் வந்த பிறகுதான் அகவிலைபப்டி உயர்வுக்கான தரவு தீர்மானிக்கப்படும். இதுவரை அகவிலைப்படி 48.54% அதிகரித்துள்ளது. தற்போது குறியீட்டு எண் 137.5 புள்ளிகள் என்ற நல்ல நிலையில் உள்ளது.
- அடுத்த மாதம் குறியீடு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- செப்டம்பர் மாதத்தில் அகவிலைப்படி வீதத்தில் 49% அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
- டிசம்பர் 2023 இன் குறியீட்டிலிருந்து மொத்த அகவிலைப்படி அதிகரிப்பின் அளவு அறியப்படும்.
- பணவீக்க விகிதத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும்
மேலும் படிக்க | LIC அறிமுகப்படுத்தும் ஜீவன் உத்சவ் பாலிஸி... அசத்தலான ஆயுள் காப்பீட்டு திட்டம்!
7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) படி ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ மதிப்பெண்களின் அடிப்படையில்தான் ஜனவரி 2024 -க்கான அகவிலைப்படி நிர்ணயிக்கப்படும். தற்போதைய ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் (AICPI Index) படி அகவிலைப்படி 48.50% ஆக உள்ளது. இது இன்னும் 2.5% அதிகரிக்கலாம். மூன்று மாத தரவுகள் எதிர்பார்க்கப்படுகிறன. எதிர்பார்க்கப்பட்ட அதிகரிப்பு இருந்தால், அகவிலைப்படி கால்குலேட்டரின் படி, மொத்த அகவிலைப்படி 51% ஐ எட்டும் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இது குறியீட்டின் கணக்கீட்டின் அடிப்படையில் இருக்கும்.
அகவிலைப்படி 5 சதவீதம் அதிகரிக்கலாம்
AICPI இன்டெக்ஸ் மதிப்பீட்டின்படி, அகவிலைப்படி 5% அதிகரிக்கலாம். இதன் காரணமாக மொத்த அகவிலைப்படி 51% ஆக உயரும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஏஐசிபிஐ இன்டெக்ஸ், துறைகளிலிருந்து தரவைத் திரட்டி, அவற்றின் அடிப்படையில் அகவிலைப்படியைக் கணக்கிடுகிறது. பல்வேறு துறைகளில் இருந்து பணவீக்க தரவு பணியாளர் கொடுப்பனவுகளை அளவிட குறியிடப்படுகிறது.
ஏஐசிபிஐ குறியீடு
- ஏஐசிபிஐ குறியீடு, பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது ஊழியர்களின் கொடுப்பனவுகள் எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
- தரவை பகுப்பாய்வு செய்யும் ஏஐசிபிஐ குறியீட்டை பொறுத்து அகவிலைப்படியில் மாற்றம் ஏற்படுகின்றது.
- பல்வேறு துறைகளின் தரவுகளின்படி, அகவிலைப்படி 5% அதிகரிக்கலாம்.
- இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) கூடுதல் கொடுப்பனவுகள் கிடைக்கும், அவர்களின் நிதி நிலை மேம்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ