எச்சரிக்கை: அரசு ஊழியர்களுக்கு அபராதங்கள் விதிக்க வாய்ப்பு!
சமீபத்தில் அரசாங்கம் சிசிஎஸ் (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் விதி 8-ல் சில திருத்தங்களை மேற்கொண்டு புதிய விதிகளை வெளியிட்டது.
பணியாளர் மற்றும் பயிற்சித் துறையானது (டிஓபிடி) ஒரு தவறுக்காக குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் மற்றொரு குற்றத்தை செய்தால் அந்த நபருக்கு இரண்டாவது முறையாக அபராதம் விதிப்பது குறித்த தெளிவான தகவலை அறிவித்துள்ளது. அலுவலக குறிப்பேட்டில் அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் அல்லது அடுத்தடுத்து இரண்டு அல்லது அதற்கு மேல் அபராதங்கள் விதிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்த தெளிவான தகவல்கள் இடம்பெற வேண்டும் என்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கூறியுள்ளது. எப்படியிருந்தாலும், இது போன்ற தகவல் குறிப்பிடப்பட வேண்டும், குறிப்பிட்ட காலத்திற்குள் விதிக்கப்பட்ட அபராதம் செலுத்தப்பட வேண்டும்.
சமீபத்தில் அரசாங்கம் சிசிஎஸ் (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் விதி 8-ல் சில திருத்தங்களை மேற்கொண்டு புதிய விதிகளை வெளியிட்டது. ஓய்வுபெற்ற ஊழியரின் ஓய்வூதியம் அல்லது கிராஜுவிட்டி அல்லது இரண்டையும் நிறுத்தி வைக்கும் முடிவை எடுக்கக்கூடிய அதிகாரிகளின் விவரங்களை இந்தத் திருத்தம் வழங்கியது. அந்த புதிய விதியின்படி ஒரு அரசு ஊழியர் பணியின் போது முறைகேடு அல்லது அலட்சியத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஓய்வுபெற்ற பின் அந்த மத்திய அரசு ஊழியரின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி வழங்குவது நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், சிசிஎஸ் (பயணச் சலுகை) விதிகள் 1988-ன் கீழ் வடகிழக்கு மண்டலம், ஜம்மு & காஷ்மீர், லடாக் மற்றும் அந்தமான் & நிக்கோபார் ஆகிய இடங்களுக்கு விமானத்தில் பயணம் செய்வதற்கான தளர்வை 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி வரை பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) நீட்டித்தது. எல்டிசி வழங்கும் இந்த நன்மையானது இப்போது புதிதாக வேலையில் பணியமர்த்தப்பட்ட நபர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | EPFO உறுப்பினர்களுக்கு ஜாக்பார்ட்! முழு PF வட்டி தொகையும் கிடைக்க வாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ