7வது ஊதியக்குழு: இந்த தேதியில் இருந்து அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்!
மத்திய அரசு வழங்கப்பபோகும் அகவிலைப்படி உயர்வின் மூலம் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், அறுபத்தி ஐந்து மத்திய ஓய்வூதியதாரர்களும் பயனடைய போகிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்கள் பலரும் வெகு நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியினை மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அறிவிக்கப்போவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டே வருகிறது. இதுகுறித்து வெளியாகும் சில தகவல்களை வைத்து பார்க்கும்பொழுது நவராத்திரியையொட்டி அதாவது இந்த செப்டம்பர் மாதத்தில் ஊழியர்களுக்கு மத்திய அரசு அந்த நல்ல செய்தியினை வழங்கப்போகிறது, அப்படி என்ன நல்ல செய்தி என்றால் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிப்பது குறித்து தான் என்றும் கூறப்படுகிறது. அப்படி மத்திய அரசு இந்த மாதம் ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தும்போது, அவர்களின் மொத்த அகவிலைப்படி 38% சதவீதமாக உயரும்.
மத்திய அரசு வழங்கப்பபோகும் இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், அறுபத்தி ஐந்து லட்சம் மத்திய ஓய்வூதியதாரர்களும் பயனடைய போகிறார்கள். அகவிலைப்படி உயரும்போது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் சேர்த்து உயர்ந்து அவர்களை மகிழ்ச்சியில் திகைக்க செய்யும், இந்த அகவிலைப்படி அக்டோபர் 1ம் தேதி முதல் ஊழியர்களுக்கு கிடைக்கப்பெறும். இந்த அகவிலைப்படி உயர்வுடன் சேர்த்து அவர்களின் சம்பளம் ரூ.27,312 ஆக கிடைப்பதோடு, இதுவரை நிலுவையிலிருந்த அகவிலைப்படியும் சேர்த்து அவர்களுக்கு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு எந்த அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது என்பது பற்றிய AICPI-IW-ன் புள்ளிவிவரங்களும் கிடைத்துள்ளது, இதன் முதல் பாதியில் 0.2 சதவீதம் அதிகரித்து 129.2 புள்ளிகள் என்கிற உயர்வை எட்டியுள்ளதால் பண்டிகை தினங்களுக்கு முன்னர் ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். தற்போது அரசு ஊழியர்கள் 34 சதவீத அகவிலைப்படியின் மூலம் ரூ.19,346 பெறுகின்றனர், 4% அகவிலைப்படி மூலம் அவர்களுக்கு ரூ.2,276 சம்பளம் உயர்ந்து ஆண்டுக்கு ஊழியர்களுக்கு கிடைக்கும் தொகை ரூ.27,312 ஆகும். அதேபோல 38 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும்போது ரூ.56,900 அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு கிடைக்கக்போகும் மொத்த அகவிலைப்படி ரூ.21,622 ஆகும்.
மேலும் படிக்க | ஆதார் கார்டில் மாற்றங்கள் செய்யணுமா? இனி உங்கள் மொபைல் மூலமே செய்யலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ