அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு... அகவிலைப்படியை உயர்த்திய இந்த மாநில அரசு!
DA Hike: மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை அறிவித்திருந்த நிலையில், தற்போது மற்றொரு மாநில அரசும் அதன் ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
7th Pay Commission, DA Hike: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்றன. நாடு முழுவதும் உள்ள பல கோடி மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். புத்தாடைகள், இனிப்பு, பலகாரங்கள், பட்டாசுகள், புதிய வாகனங்கள், புதிய பொருள்களுடன் தீபாவளியை கொண்டாட காத்திருக்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளி என்றாலே குதூகலம் வந்துவிடும்.
அதேபோல், அரசு ஊழியர்கள் முதல் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வரை பலரும் தீபாவளிக்கு போனஸ் வாங்குவார்கள். இது பண்டிகை காலங்களில் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக கூடுதல் நிம்மதியை அளிக்கும். போனஸ் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும். தனியார் நிறுவனங்கள் வேறு சில கணக்கீட்டின்படி போனஸை வழங்கும்.
DA 53% ஆக உயர்வு
இது ஒருபுறம் இருக்க, தற்போது மாநில அரசு ஒன்று அதன் ஊழியர்களுக்கு தீபாவளிக்கு இனிப்பான செய்தி ஒன்றை வழங்கி உள்ளது. அதாவது, ஒடிசா மாநில அரசு அதன் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநில அரசு பணியாளர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. அதை தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த 3 சதவீத அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதம் முதல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின் பேசிய முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா,"இந்த உயர்வின் மூலம் மத்திய அரசு ஊழியர்களை போல மாநில அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 53 சதவீத அகவிலைப்படி வரும்" என்றார்.
4 தவணைகளில் வழங்கப்படும்
மேலும், அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி தொகையானது ஜூலையில் இருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும், பாக்கி தொகைகள் நான்கு தவணைகளாக செலுத்தப்படும் என்பதையும் அசாம் முதல்வர் தெரிவித்தார். அதாவது, ஜூலை முதல் அக்டோபர் வரையிலான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகை (53%) அடுத்தாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதங்களில் வழங்கப்படும் என்றார். மேலும் வரும் டிசம்பர் முதல் இந்த அகவிலைப்படி உயர்வு வருமானத்தில் பிரதிபலிக்கும் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான நரேந்திர மோடி அரசு கடந்த அக். 16ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வை அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநில அரசுகளும் தங்களின் ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி உத்தரவிட்டன. இதனால், பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பலனடைவார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ