ஆதார் - பான் இணைக்கவில்லை என்றால் இவ்வளவு பிரச்சனையா? உடனே செக் பண்ணுங்க!
நீங்கள் இன்னும் பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், ஜூன் 30, 2023க்குள் அவற்றை இணைக்க வேண்டும். இல்லையெனில், ஜூலை 1 2023 முதல் அதைப் பயன்படுத்த முடியாது.
Pan Aadhaar Link: பான் கார்டு என்பது இந்தியாவில் வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட பத்து இலக்க தனித்துவமான கார்ட் ஆகும். இந்திய குடிமகன்களுக்கு பான் கார்டு லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக் அட்டை வடிவில் வழங்கப்படுகிறது. நமது நிதி தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்த பான் கார்டின் மூலமாக வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது. அப்படிப்பட்ட பான் கார்டை 12 இலக்க எண் கொண்ட ஆதார் கார்டுடன் இணைக்கக்கோரி அரசு வலியுறுத்தி வருகிறது. நீங்கள் இன்னும் பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், ஜூன் 30, 2023க்குள் அவற்றை இணைக்க வேண்டும். இல்லையெனில், ஜூலை 1, 2023 முதல் அதைப் பயன்படுத்த முடியாது. பான் கார்டு வைத்திருப்பவர்கள் இந்தக் காலக்கெடுவுக்குள் ஆதார்-பான் இணைப்பு செயல்முறையை செய்யாவிட்டால் அவர்களின் 10 இலக்க எண்ணெழுத்து கொண்ட பான் கார்டு செயல்படாது. பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்துவது இது முதன்முறை கிடையாது.
மேலும் படிக்க | 8th Pay Commission பம்பர் அப்டேட்: விரைவில் நல்ல செய்தி, ஊதிய உயர்வு
ஏற்கனவே அரசு மார்ச் 31, 2022க்குள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் ஆதார்-பான் இணைப்பு செயல்முறையை செய்ய அறிவுறுத்தியது. அதன் பிறகு ஜூன் 30, 2022 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு ரூ.500 கட்டணம் செலுத்தக்கோரியது, மீண்டும் மார்ச் 31, 2023க்குள் ஆதார்-பான் இணைப்பு செயல்முறையை செய்யக்கோரி அரசு வலியுறுத்தியது. இப்போது மீண்டும் அரசு ஆதார்-பான் இணைப்பு செயல்முறைக்கான காலக்கெடுவை ஜூன் 30, 2023 வரை நீட்டித்துள்ளது, இந்த செயல்முறைக்கு இப்போது ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.
ஆதார் அட்டையுடன் பான் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பது எப்படி ?
1) www.incometax.gov.in/iec/foportal/ ல் உள்நுழையாமல் பான்-ஆதார் இணைப்பு நிலையைப் பார்க்கலாம்.
2) இ-ஃபைலிங் போர்டல் முகப்புப் பக்கத்தில், 'குயிக் லிங்க்ஸ்' என்பதற்குச் சென்று, லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என்பதைக் கிளிக் செய்யவும்.
3) பான் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டு, வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என்பதை கிளிக் செய்யவேண்டும்.
4) சரிபார்ப்பு வெற்றிகரமானதும், ஆதார் ஸ்டேட்டஸ் குறித்த செய்தி காட்டப்படும் .
5) ஆதார்-பான் இணைப்பு செயல்பாட்டில் இருந்தால் திரையில் காண்பிக்கப்படும்.
சரிபார்ப்பிற்காக ஆதார்-பான் இணைக்கும் கோரிக்கை யூஐடிஏஐ-க்கு அனுப்பப்பட்டும். இதன் முகப்புப் பக்கத்தில் உள்ள 'லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்' என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இணைப்பு நிலையைச் சரிபார்க்கலாம். ஆதார்-பான் இணைப்பு செயல்முறை நடந்திருந்தால் பான் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது என்கிற செய்தி திரையில் வரும்.
மேலும் படிக்க | டபுள் ஜாக்பாட்... அகவிலைப்படி உடன் அகவிலை நிவாரணத்தை அதிகரித்த மாநில அரசு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ