7th Pay Commission DA Hike: ஒவ்வொரு அரசு ஊழியரும் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். அதே நேரத்தில், அகவிலைப்படியை அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களின் சம்பளமும் அதிகரித்து, அவர்களுக்கு அதிக பணமும் கிடைக்கிறது.
மத்திய அரசு மற்றும் சில மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது. தற்போது, ஹரியானா மாநில அரசால் அகவிலைப்பபடி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஹரியானா அரசு உயர்த்தியுள்ளது.
டிஏ அதிகரிப்பு
ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தி ஹரியானா அரசு அறிவித்துள்ளது. ஹரியானா அரசின் நிதித்துறையும் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்தத் துறை பிறப்பித்த உத்தரவின்படி, அடிப்படை ஊதியத்தில் தற்போதுள்ள 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜனவரி 1ஆம் தேதி முதல் உள்ள நிலுவை தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 8th Pay Commission பம்பர் அப்டேட்: விரைவில் நல்ல செய்தி, ஊதிய உயர்வு
இத்துடன் அரசு ஊழியர்களின் சம்பளமும் அதிகரித்து சம்பள உயர்வு வரும். அந்த உத்தரவின்படி, உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஏப்ரல் மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என்றும், 2023 ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிலுவைத் தொகை மே மாதத்திலும் வழங்கப்படும். இதனுடன், அகவிலை நிவாரணத்துடன் (DR) மாநில அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களும் இதன் பலனைப் பெறுவார்கள்.
DR அதிகரிப்பு
ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் அகவிலை நிவாரணத்தை (DR) மாநில அரசு நான்கு சதவீதம் உயர்த்தியுள்ளதாக நிதித் துறை மற்றொரு உத்தரவில் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள அடிப்படை ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியத்தில் டிஆர் 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது ஜனவரி 1, 2023 முதல் பொருந்தும்.
முன்னதாக, ராஜஸ்தான், அஸ்ஸாம், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தங்கள் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு இரட்டை நற்செய்தி: டிஏ ஹைக்குடன் இதுவும் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ