மத்திய அரசு  ஆதார் - பான் எண் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது. அரசின் அனைத்து சேவைகளிலும் இருக்கும் போலிகளை அடையாளம் காணவும், முறையான பயனாளர்களுக்கு அரசு திட்டங்கள் சென்று சேருவதை உறுதி செய்யவும் ஆதார் - பான் எண் இணைப்புக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதியுடன் இதற்கான காலவகாசம் முடிவடைகிறது. ஏற்கனவே பலமுறை காலவகாசத்தை கொடுத்துவிட்டதால் இம்முறை இந்த காலவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதனால், காலக்கெடுவுக்குள் ஆதார் - பான் இணைப்பை மேற்கொள்ளாதவர்கள், அதனை செய்துவிடுங்கள். ஒருவேளை நீங்கள் ஆதார் பான் எண் இணைப்பை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், என்னென்ன பாதிப்புகள் எதிர்கொள்ள நேரிடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  


மேலும் படிக்க | SBI YONO பாஸ்வேர்டு - ஐடி தொலைந்துவிட்டதா? எளிதாக பெற வழி


பான்-ஆதார் இணைக்கவில்லை என்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?


1. ஒரு நபரின் பான் கார்டு ஆதார் கார்டுடன் இணைக்கப்படாதபோது அது செயலிழந்துவிடும்.


2. ஏப்ரல் 1 முதல் எந்த ஒரு வங்கிகளும் உங்களால் கணக்கு புதிதாக தொடங்க முடியாது. 


3. ஏற்கனவே இருந்த வங்கிக் கணக்கில் உங்களது டெபிட் கார்டு வேலிடிட்டி முடிவடைந்து விட்டால் புதிய கார்டு வழங்குவதில் சிக்கல் ஏற்படும்


4. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், மானியம் பெறுதல் போன்ற அரசு சேவைகளை பெறுவது கடினம்.


5. பேங்கிலேயே அல்லது போஸ்ட் ஆபீஸ்லயோ, ஒரு நாளைக்கு 50,000 ரூபாய்க்கு மேல் உங்களால் டெபாசிட் பண்ண முடியாது 


6. பான்-ஆதார் இணைக்கப்படாதபோது, ​​புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் என்பதால், பழையது சேதமடைந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ புதிய பான் கார்டைப் பெறுவது கடினமாக இருக்கலாம்.


7. வருமான வரி தாக்கல் செய்ய முடியாது.வரி செலுத்துவோர் ITR ஐ தாக்கல் செய்யவோ அல்லது செயல்படாத PAN கார்டுகளுடன் ITR-ஐ கோரவோ முடியாது. நிலுவையில் உள்ள வருமானங்கள் செயலாக்கப்படாது, மேலும் செயல்படாத பான் கார்டுகளுக்கு நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப்பெற முடியாது.TCS/TDS அதிக விகிதத்தில் பொருந்தும்.


8. அபராதமும் விதிக்கப்படும்


பான்-ஆதார் இணைப்பிற்கான விலக்கு வகையின் கீழ் யார் வருவார்கள்?


ஜம்மு மற்றும் காஷ்மீர், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் நபர்கள். வருமான வரிச் சட்டம், 1961 இன் படி குடியுரிமை பெறாத வரி விதிக்கக்கூடிய நபர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் (சூப்பர் மூத்த குடிமக்கள்). இந்திய குடிமக்கள் அல்லாத நபர்கள்.


மேலும் படிக்க | 2 பான் கார்ட் இருக்கா? அபராதம், சிறை தண்டனை கிடைக்கும்: இப்பவே இப்படி சரண்டர் பண்ணுங்க!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ