சிமென்ட் துறையில் அதானி குழுமத்தின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது அதானி குடும்பத்தின் சிமெண்ட் நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸ், பென்னா சிமென்ட் இண்டஸ்ட்ரீஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, 10,442 கோடி ரூபாய்க்கு பென்னா சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ் தனது நிறுவனத்தை அதானி குழுமத்திற்கு கொடுக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தென்னிந்தியாவில் அம்புஜா சிமென்ட் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செப்டம்பர் 2022 இல் அதானி குழுமம் அம்புஜா சிமெண்ட் என்ற சிமெண்ட் நிறுவனத்தை வாங்கியது. அதன் பிறகு இது நிறுவனத்தின் நான்காவது பெரிய வணிக ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பென்னா சிமெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பி பிரதாப் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆவர்கள்.


பென்னா சிமெண்ட் நிறுவனம் ஆண்டுக்கு 14 மில்லியன் டன்கள் என்ற அளவுக்கு சிமெண்டை உற்பத்தி செய்கிறது. தற்போது 4 மில்லியன் டன் சிமெண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை தயாராகி வருகிறது.


தென்னிந்தியாவில் அம்புஜா சிமெண்ட்டின் பங்கு 8% அதிகரிக்கும்


அம்புஜா சிமென்ட், தனது சொந்த சேமித்த பணத்தை கொண்டே பென்னா சிமெண்ட் நிறுவனத்தை வாங்குகிறது. இந்த விற்பனை முடிந்ததும் தென்னிந்தியாவில் அம்புஜா சிமென்ட் பங்கு 8% உயரும். சந்தையில் முன்னணியில் இருக்கும் அல்ட்ராடெக் சிமெண்ட் சில மாதங்களுக்கு முன்பு கேசோரம் இண்டஸ்ட்ரீஸின் கட்டுமானப் பொருள் தொழிற்சாலைகளை வாங்கிய பிறகு, அம்புஜா சிமெண்ட் நிறுவத்தின் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அம்புஜா சிமென்ட் நிறுவனத்திடம் ஏப்ரல் மாத இறுதியில் ரூ.24,338 கோடி ரொக்கம் இருந்தது. இந்தத் தொகையில் அதானி குடும்பத்தின் வாரண்ட் தொகையான ரூ.8,339 கோடியும் அடங்கும்.


மேலும் படிக்க | 2 லட்சம் வேலைவாய்ப்புகள்! 4 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு! மாஸ் காட்டும் PLI scheme!


அம்புஜாவின் ACC மற்றும் Sangi Industries 
பென்னா சிமென்ட் உடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு, அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும். தற்போது ACC மற்றும் Sangi Industries ஆகியவை அம்புஜாவின் ஒரு பகுதியாக உள்ளன. 2028ஆம் ஆண்டுக்குள் 140 மில்லியன் டன் சிமென்ட் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அம்புஜா சிமெண்ட் இலக்கு வைத்துள்ளது.


குமார் மங்கள் பிர்லாவுக்குச் சொந்தமான அல்ட்ராடெக் சிமென்ட், 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உற்பத்தித் திறன் கொண்டது. ஹரி மோகன் பங்கூர் தலைமையிலான நாட்டின் மூன்றாவது பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனமான ஸ்ரீ சிமென்ட், ஆந்திரப் பிரதேசத்தில் ஏப்ரல் மாதத்தில் 3 மில்லியன் டன் உற்பத்தி ஆலையைத் தொடங்கியுள்ளது. தனது உற்பத்தி திறனை 56 மில்லியன் டன்னாக உயர்த்த வேண்டும் என்று இந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.


அம்புஜா சிமென்ட், முன்பு குஜராத்தில் உள்ள சங்கி தொழிற்சாலைகள், தமிழ்நாட்டில் மை ஹோம் சிமென்ட் தொழிற்சாலை மற்றும் இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாபில் உள்ள ஏசியன் கான்கிரீட் மற்றும் சிமெண்ட்ஸ் தொழிற்சாலைகளை வாங்கியது. பென்னா சிமெண்டின் பிரதாப் ரெட்டி, சிமென்ட் வணிகத்திற்கான ஐபிஓவை தொடங்க திட்டமிட்டிருந்தார்.


அக்டோபர் 2021 இல், ரூ. 1550 கோடி ஐபிஓவைத் தொடங்குவதற்கு செபியிடம் இருந்து பென்னா சிமெண்ட் ஒப்புதல் பெற்றது குறிப்பிடத்தக்கது. பென்னா சிமெண்ட்டின் உரிமையாளரான பிரதாப் ரெட்டி, தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு, ஐபிஓ தொடங்கும் எண்ணத்தை நிறுத்திவிட்டார்.


மேலும் படிக்க | வருங்கால வைப்பு நிதியில் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? கணக்கிடுவது சுலபம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ