RBI: கார்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் அனைத்தும் அக்டோபரில் இருந்து கட்டாயம்
RBI on Credit and Debit Cards: டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் அனைத்தும் அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வர வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவு
புதுடெல்லி: டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் அனைத்தும் அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வர வேண்டும் என்று கார்டு நிறுவனங்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, இது தொடர்பான விதிகளை உருவாக்கிய இந்திய ரிசர்வ் வங்கி, கார்டு நிறுவனங்கள் அனைத்தும், விதிமுறைகளை ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. எனினும், சில விதிமுறைகளை அமல்படுத்த கூடுதல் கால அவகாசம் வேண்டும் என ரிசர்வ் வங்கியிடம் கார்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்றுக் கொண்ட ரிசர்வ் வங்கி , விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான கடைசி தேதியை அக்டோபர் முதல் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, கார்டு டோக்கனைசேஷன் விதிகள் ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வந்தன. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு டோக்கனைசேஷன் விதிகளை வெளியிட்டது.
அதன்படி, ஆன்லைன் வணிகர்கள் வாடிக்கையாளர்களது கார்டுகளின் டேட்டாக்களை சேமிக்க முடியாது. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, அசல் கார்டுகளின் டேட்டாக்களை என்க்ரிப்ட் செய்யப்பட்ட டிஜிட்டல் டோக்கனுடன் மாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | MasterCard, RuPay Card, VISA Card: 3 கார்டுகளுக்கு உள்ள வித்தியாசம் என்ன?
வாடிக்கையாளர்கள் சம்மதம் இன்றி நிறுவனங்கள் அவர்களுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்கவோ அல்லது கிரெடிட் கார்டுகளில் எந்தவித மாற்றத்தை செய்யக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின்படி, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயனாளர்கள் பயன்பெறுவார்கள். ஒரு வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்யப்படவில்லை என்றால், கார்டை ஆக்டிவேட் செய்வதற்கு முன் வாடிக்கையாளரிடம் ஓடிபி பாஸ்வேர்ட் மூலம் சம்மதம் பெற வேண்டும்.
ஏதேனும் காரணத்தால், 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்யப்படாத கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்ய ஓடிபி பாஸ்வேர்ட் ஒப்புதல் வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கவில்லை என்றால், எந்தவொரு கூடுதல் கட்டணமும் வசூலிக்காமல் 7 நாட்களுக்குள் கிரெடிட் கார்டு கணக்கு மூடப்பட வேண்டும்.
வாடிக்கையாளரிடம் சொல்லப்பட்ட கிரெடிட் கார்டு உச்சவரம்பை, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் ஒப்புதல் இல்லாமல் மாற்றக்கூடாது. இந்த விதிகள் அனைத்தையும் கார்டு நிறுவனங்கள் அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமல்படுத்த வேண்டும் என கார்டு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க | HDFC முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ்; வங்கி முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ