கடந்த ஆண்டு வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை சற்று உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், இந்நிலையில் தற்போது இந்த ஆண்டில் மீண்டும் ஏர்டெல் அதன் ப்ரீபெய்டு திட்டங்களின் விலையை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.  இந்த தகவலை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் உறுதிப்படுத்தியுள்ளார்.  இந்த முறை ஒரு பயனருக்கு சராசரியாக ரூ.200 ஆக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ICICI வங்கி சிறப்பு பரிசு; இந்த வட்டி விகிதம் அதிகரிப்பு


நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி விட்டல் கூறுகையில், 5 ஜி-க்கான டெலிகாம் ரெகுலேட்டரின் அடிப்படை விலையில் ஏர்டெல் திருப்தி அடையவில்லை.  நிறுவனத்தினர் விலையை கணிசமாக குறைக்க விரும்பினர், அதன்படி விலை குறைக்கப்பட்டபோதிலும் அது போதுமானதாக இல்லை மற்றும் அது நிறுவனத்திற்கு ஏமாற்றத்தையே அளித்தது என்று தெரிவித்தார்.  கடந்த ஆண்டு தனியாருக்குச் சொந்தமான மூன்று டெலிகாம் ஆபரேட்டர்களும் அவர்களின் ரீசார்ஜ் திட்ட விலைகளை கிட்டத்தட்ட 18 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தினர்.



5ஜி ரிவர்ஸ் விலை தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை,  5ஜி ரிசர்வ் விலையை 90 சதவீதம் குறைக்க வேண்டும் என்று நிறுவனங்கள் வலியுறுத்தின.  புதிய விலை உயர்வு ஒரு தற்காலிக அளவு மட்டுமே, விலை உயர்வு இருந்தபோதிலும் ஏர்டெல் மார்ச் மாதத்தில் அதிக 4ஜி பயனர்களை ஈர்த்து (5.24 மில்லியன் ஆக இருந்தது.  இதற்கு முன்னர் 3 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருந்த நிலையில் தற்போது இதன் அளவு அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் 2021-ல் ப்ரீபெய்டு திட்டங்களின் விலையை 18 முதல் 25 சதவீதம் வரை உயர்த்திய முதல் நிறுவனமாக ஏர்டெல் இருந்தது.  வோடபோன் ஐடியாவும் அதே அளவில் அதன் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களைத் உயர்த்தியது, அதேசமயம் கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ 20 சதவீதம் வரை விலைகளை உயர்த்தியது.


மேலும் படிக்க | LIC Home Loan: குறைந்த விலையில் சொந்த வீடு வாங்கலாம், எப்படி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR