ஏடிஎம்மில் நடக்கும் மிகப்பெரிய மோசடி! பணம் எடுக்கும் போது உஷார்!
வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் சில முக்கிய அப்டேட் வெளியாகி உளது. விரைவில், ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய வழி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை எடுக்கும்போது மோசடி கும்பல் பணத்தை திருடுவதை தடுக்க ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் வங்கிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்கள் மூலம் நமது கணக்கில் உள்ள பணத்தை எடுத்து கொள்ள முடியும். இது ஒரு நல்ல மற்றும் பாதுகாப்பான வழியாகும். வங்கிகள் உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் அனைவருக்கும் வங்கி சேவையை எளிதாக்குகிறது. இன்றைய உலகில் டிஜிட்டல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஏடிஎம்களில் பணம் எடுப்பது தொடர்பான சில விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றப் போகிறது.
அனைவரின் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும், மோசடிகள் நடக்காமல் தடுக்கவும் ஏடிஎம்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும். அதனை தாண்டியும் சில கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகிறது. சில ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. இதனால் பணம் எடுக்கும் போது சில புதிய திட்டங்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. ஏடிஎம்மில் உள்ள சிறப்பு இயந்திரம் மூலம் நாம் பணத்தை எடுத்து வருகிறோம். குறிப்பிட்ட நேரத்திற்குள் வாடிக்கையாளர்கள் பணத்தை ஏடிஎம் பணத் தட்டில் இருந்து எடுக்கவில்லை என்றால், ஏடிஎம் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும். இந்த சமயத்தில் மோசடி கும்பல் செய்யும் சில வேலைகளால் குறிப்பிட்ட வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
மக்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் முறை மாறிய பிறகு, சில மோசடிக்காரர்கள் பணத்தை திருட புதிய தந்திரங்களைக் கண்டுபிடித்தனர். அதில் ஒரு தந்திரம் என்னவென்றால், பணம் வெளிவரும் இடத்தில் போலி கார்டு வைக்கின்றனர். அந்த சமயத்தில் ஏடிஎம்மில் யாராவது பணத்தை பெற முயற்சித்தால், பணம் வெளியே வராது, இடையில் சிக்கிக்கொள்ளும். வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் இல்லை என்று நினைத்து திரும்பி சென்றுவிடுவார்கள். ஆனால் உண்மையில் பணம் வெளியே வந்து பாதியில் இருக்கிறது. வாடிக்கையாளர் வெளியேற சென்றவுடன் மோசடிக்காரர்கள் போலி கார்டை எடுத்துவிட்டு, அதில் உள்ள பணத்தை எடுத்து கொள்கின்றனர்.
இதனால் நமது பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க ரிசர்வ் வங்கி பணத்தை இவ்வாறு திருட முடியாதபடி, ஏடிஎம்களை பாதுகாப்பானதாக மாற்றுமாறு வங்கிகளிடம் கூறியது. மோசடி சம்பவங்கள் அதிகம் நடக்கும் ஏடிஎம்களில் முதலில் பணம் எடுக்கும் வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வங்கிகள் தங்கள் ஏடிஎம் இயந்திரங்களை மேம்படுத்தவும், சில தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மக்களின் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும், மோசடி கும்பலிடம் இருந்து தப்பிக்கவும் உதவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ