எஃப்டி-யில் பணம் போட்டவர்கள் கவனத்திற்கு! இந்த 5 வங்கிகளில் வட்டி விகிதம் மாற்றம்!
Interest Rate On FD: இந்தியாவில் உள்ள பல வங்கிகள் தற்போது நிலையான வைப்புகளின் (FD) வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளன. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
Interest Rate On FD: நீங்கள் ஒரு வங்கியில் நிலையான வைப்பு நிதி கணக்கு தொடங்க போகிறீர்கள் என்றால் முதலில் அந்த வங்கிகளின் வட்டி விகிதத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு எஃப்டியில் சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. நீங்களும் நிலையான வைப்பு நிதியில் (FD) முதலீடு செய்துள்ளீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது இந்தியாவில் உள்ள பல வங்கிகள் எஃப்டி மீதான வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளன. இதனால் உங்களுக்கு எஃப்டி பணத்தில் இருந்து வரும் வட்டியின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த மாற்றம் நீண்ட கால முதலீடுகளுக்கு இல்லை என்பது சற்று ஆறுதலான விஷயம். குறுகிய காலத்திற்கு எஃப்டி முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். தற்போது எந்த எந்த வங்கி எஃப்டியில் மாற்றம் செய்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் டபுள் ஜாக்பாட்? தயாராகும் மத்திய அரசு
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி 15 முதல் 18 மாதங்கள் வரையிலான எஃப்டிகளுக்கும், 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கும் 7.20 சதவீத வட்டியை வழங்கி வருகிறது. ஒரு வருடத்திற்கு முதலீடு செய்தால், அதன் வட்டி விகிதம் 6.7 சதவீதம் ஆகும், 3 வருட டெபாசிட்டுகளுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. குறுகிய கால டெபாசிட்டுகளுக்கு ஐசிஐசிஐ வங்கி 3 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை மட்டுமே வட்டி தருகிறது. ஆனால், இந்த வட்டி ரூ.3 கோடி வரையிலான டெபாசிட்டுகளுக்கு மட்டுமே.
பேங்க் ஆஃப் இந்தியா
பாங்க் ஆஃப் இந்தியாவும் எஃப்டிகளுக்கு வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளன. மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதம் வட்டியும், மற்றவர்களுக்கு 7.30 வட்டியும் வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் ரூ.3 கோடி வரையிலான முதலீட்டுக்கு பொருந்தும். மேலும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 7 முதல் 14 நாட்கள் முதலீட்டுக்கு 3 சதவீதம் வட்டி தருகிறது.
உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி
உஜ்ஜீவன் வங்கி எஃப்டிகளுக்கு வட்டி விகிதங்களை தற்போது மாற்றியுள்ளது. இருப்பினும், இந்த மாற்றம் ரூ.3 கோடி வரை முதலீடு செய்யப்படும் எஃப்டிகளில் மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 12 மாத முதலீட்டுக்கு உஜ்ஜீவன் வங்கி 8.25 சதவீதம் வட்டி தருகிறது. அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 8.75 சதவீதமாக உள்ளது. உஜ்ஜீவன் வங்கி 7 முதல் 29 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 3.75 சதவீத வட்டி அளிக்கிறது.
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியும் வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளன. இந்த வங்கி மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதமாக இருக்கும் அதே வேளையில், மற்றவர்களுக்கு 7.30 சதவீதம் வழங்குகின்றன. 3 கோடி வரையிலான முதலீடுகளுக்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும்.
ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி ஆண்டுக்கு 7 சதவீதத்துக்கும் மேல் எஃப்டிகளுக்கு வட்டி தருகிறது. ஒரு ஆண்டிற்கு எஃப்டிகளுக்கு 6.7 சதவீதம் வட்டி தருகிறது. அதுவே இரண்டு வருட எஃப்டிகளுக்கு 7.10 சதவீதம் வட்டியை வங்கி வழங்குகிறது. இருப்பினும், இது ரூ.5 கோடிக்கும் குறைவான முதலீடுகளுக்கானது.
மேலும் படிக்க | நுழைவுத்தேர்வுகளுக்கான வடிவத்தை மாற்றிய NTA! புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ